நம்மிடம் உள்ள சில பொருட்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதால் கெட்ட விஷயங்கள் நடக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது அப்படி தவறுதலாக கூட மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாத சில பொருள்களை இங்கு காணலாம்.
நண்பர்களுக்குள், உடன்பிறப்புகளோடு என நம் ஆடைகளை மாற்றிப் போட்டுக் கொள்வது இயல்பான விஷயம். ஒருவர் ஆடையை மற்றொருவர் பகிர்ந்து கொள்வது உறவின் ஆழத்தையும், அன்பையும் காட்டுகிறது. ஆனால் வாஸ்துபடி ஆடைகளை இப்படி பரிமாறிக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதை செய்வதால் நமக்கு எதிர்மறை ஆற்றல் கிடைக்குமாம். துரதிரஷ்டமாகவும் பார்க்கப்படுகிறது. சிலருக்கு தோல் அலர்ஜி ஏற்படும்.
ஆடைகளை மாற்றிக் கொள்வது போல சிலர் காலணிகளையும், ஷூக்களையும் கூட மாற்றிக் கொள்ளுவர்.செருப்பை மற்றவரோடு பகிர்வது வாஸ்து சாஸ்திரத்தின்படி அசுபமாக கருதப்படுகிறது. கோயிலுக்கு செல்லும்போது அங்கு செருப்பு தொலைந்து போனால், வீட்டு பெரியவர்கள்" நம்முடைய ஏழரை சனி இத்தோடு விலகி விட்டது" என சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. வாஸ்து சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ஒருவருடைய பாதத்தில் இருப்பதாகத்தான் சொல்லப்படுகிறது. ஆகவே பிறருடைய செருப்பை யாராவது அணிந்தால் சனியின் கோபம் அணிந்தவர் மீது போய்விடுமாம். பிறர் செருப்பை அணிந்தால் வீட்டில் நிம்மதியில்லாமல் போகலாம்.
மற்றவர்களிடம் பேனா கடன் வாங்கி எழுதுவது பலருக்கும் வாடிக்கையாக இருக்கும். வங்கிகள், ஏதேனும் அலுவலகங்களில் பேனாக்களை கடன் வாங்கி எழுதி விட்டு மறந்து நம்முடனே எடுத்து வந்து விடுவோம். வாஸ்து சாஸ்திரம் இதை தவறு என்று ஆணித்தரமாக கூறுகிறது. அதாவது ஒரு நபருடைய விதிக்கும் அவருடைய பேனாவுக்கும் தொடர்பு இருக்குமாம். ஒரு வேளை நாம் பேனா கடன் வாங்கிய நபர் துரதிஷ்டவசமான சூழ்நிலையில் சிக்கியிருந்தால், அந்த துரதிஷ்டம் நமக்கும் வந்துவிடும். அதனால் யாரிடமாவது பேனா கடன் வாங்கினால் மறக்காமல் திரும்ப கொடுத்து விடுங்கள்.
இதையும் படிங்க: ஆவிகளுடன் பேச வைக்கும் ஓயிஜா போர்டு கேம்.. ஆர்வகோளாறில் விளையாடிய சிறுமிகள்.. பதிலுக்கு நடந்த அமானுஷ்யம்