சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கிடுச்சு.. திடீர் பணமழை கொட்ட போகுது..!

First Published | Mar 9, 2023, 12:37 PM IST

ஆடம்பர வாழ்க்கையின் அதிபதியான சுக்கிரன் மேஷ ராசியில் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் வருகிறது. இதனால் செல்வம் அதிர்ஷ்டம் கிடைக்கும். 

இன்னும் மூன்று நாள்களில் சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் வெவ்வேறு ராசிகள் நல்ல பலனை அடையப் போகின்றன. வரும் மார்ச் 12ஆம் தேதி 08:13 மணிக்கு மேஷ ராசியில் செல்வம், புகழை அள்ளி கொடுக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

ஜோதிடத்தில் சுக்கிரன் என்பது வாழ்க்கையில் உடல் மகிழ்ச்சியின் அம்சமாக அறியப்படுகிறது. சுக்கிரன் கிரகத்தின் தாக்கத்தால், ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையில் இன்பம், பொருள், ஆடம்பரம், பேர் புகழ் ஆகியவை பெறுகிறார். ஜோதிடத்தில், சுக்கிரனின் சஞ்சாரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இயற்கையான பலன் தரும் கிரகம் என்பதால் பெரும்பாலும் சாதகமான பலன்களையே தருகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் இதனால் நன்மை பெறுவார்கள் என்பதை இங்கு காணலாம். 

Tap to resize

மிதுனம் 

மிதுன ராசியில் சுக்கிரனின் சஞ்சரிப்பது நல்ல பலனைத் தரும். உங்களுடைய ராசியில் வருமானம் தரும் இடத்திற்கு மாறப் போகிறார். இந்த நேரத்தில் நீங்கள் பழைய முதலீடுகளிலிருந்து பயனடையலாம். இதனால் புதிய வருவாய் வழிகளை உருவாக்கலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையிடம் ஆதரவைப் பெறுவார்கள். நிதி ஆதாயம் உண்டாகும். எந்த பெரிய வர்த்தகத்தையும் இப்போது (மார்ச்.12 சுக்கிரன் பெயர்ச்சிக்கு பின்) உறுதி செய்யலாம். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் நேரம் நல்லது.

இதையும் படிங்க: உங்க கைக்கு பணம் வந்த வேகத்தில்.. ஒன்னும் இல்லாமல் விரயமா போகுதா? அப்போ வீட்டில் இந்த தவறுகளை செய்யுறீங்களா?

மேஷம் 

சுக்கிரனின் மேஷ ராசி சஞ்சாரம், மேஷ ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். சுக்கிரன் உங்கள் லக்ன வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனுடன், திருமணமான தம்பதிகள் தங்கள் துணையிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். அதே நேரத்தில், நீங்கள் கூட்டு வேலைகளையும் தொடங்கலாம். மறுபுறம், சுக்கிரன் உங்களுக்கு திடீர் பணவரவை கொடுக்கும். திருமணமாகாதவர்கள் திருமண தடை நீங்கும். 

தனுசு 

தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமான பலன்களை தரும். சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால், சந்ததி, காதல்-உறவு மேம்படும். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். சிலருக்கு பந்தயம் மற்றும் லாட்டரியில் லாபம் கிடைக்கலாம். நேரம் சாதகமாக இருக்கிறது. குழந்தைப் பேறு பெற விரும்பும் தம்பதிகள் இப்போது முயற்சி செய்தால் சாதகமான பலன்களை அடையலாம். தொழில்முனைவோர் அதிக பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பர். பணியிடங்களில் பதவி உயர்வு பெறலாம். 

இதையும் படிங்க: சூரிய ஒளியால் வைட்டமின் டி முழுமையா கிடைக்கும்.. அதை பெற சரியான நேரம் எது தெரியுமா?

Latest Videos

click me!