Diwali: கோவர்த்தன பூஜை ஏன் 25ஆம் தேதி செய்யக் கூடாது? காரணம் என்ன? மிஸ் பண்ணாமல் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

First Published | Oct 20, 2022, 10:06 AM IST

 Govardhan Puja 2022: தீபாவளி திருநாளுக்கு அடுத்த நாளில், ஆண்டு தோறும் கோவர்தன பூஜை அல்லது கிருஷ்ணர் பூஜை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை இந்த 2022 ஆம் ஆண்டு வரும் அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் புத்தாடை அணிந்து, உணவு சமைத்து உண்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். தீபாவளி திருநாளுக்கு அடுத்த நாளில், ஆண்டு தோறும் கோவர்தன பூஜை அல்லது கிருஷ்ணர் பூஜை வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

கோவர்த்தன பூஜை வழிபாட்டு முறை:

ஐப்பசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பிரதிபடா திதியில் கோவர்தன் பூஜை விழா கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் இந்த கோவர்தன் பூஜை  நாளில் பசு வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.  இந்த நாளில் கோவர்த்தனம் பசுவின் சாணத்தால் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர், கோவர்தனுக்கு தூபம், தீபம், நைவேத்யம், பழங்கள், தண்ணீர் போன்றவற்றை வைத்து வழிபாடு நடைபெறும்.

Latest Videos


இந்த கோவர்தன பூஜை திருநாளை, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. குஜராத்தி மக்கள் தங்களின் புத்தாண்டாகவும், மராத்தியர்கள் வாமணர், மகாபலி சக்கரவர்த்தியை பாதாள லோகத்திற்கு அனுப்பிய  நாளாகவும் கொண்டாடுகின்றனர்.  கோவர்தன் பூஜை விழா தீபாவளிக்கு அடுத்த நாள் கொண்டாடப்பட்டாலும், சில சமயங்களில் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் இடையே 1 நாள் இடைவெளி இருக்கும்.

கோவர்தனன் பூஜை புராணத்தின் படி, கோவர்தன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வடிவமாகவும் கருதப்படுகிறார்.  இந்திரனை வணங்கும் யாதவர்கள், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டு பிருந்தாவனத்தின் கோவர்தன குன்றை பூஜை செய்த காரணத்தினால், கோபம் கொண்ட இந்திரன் சூறாவளிக் காற்றை வர வைத்து தடுத்தார். அப்போது, கிருஷ்ணன், ஆயர்களை கோவர்தன மலையை குடையாகப் பிடித்துக் காத்தார். ஆயர்களையும், ஆவினங்களையும் காத்த கிருஷ்ணனை, நினைவு கூரும் வகையில் தற்போதும் இந்த திருவிழா கொண்டப்படுகிறது.

கோவர்த்தன பூஜை ஏன் 25ஆம் தேதி செய்யக் கூடாது? 

ஆனால், இம்முறை அதாவது 2022ல் , அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணம் நிகழப் போகிறது. எனவே. இந்த வருடம் தீபாவளிக்கு மறுநாள் கோவர்த்தன பூஜை செய்யக்கூடாது. இந்த 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று  மதியம் 2:29 மணிக்கு துலாம் ராசியில் நிகழவுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த வருடம் அக்டோபர் 26-ம் தேதி புதன்கிழமை அன்று கோவர்த்தன பூஜையும் கொண்டாடப்படும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றது.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

click me!