இதற்கு முதலில், மகாலட்சுமியின் திரு உருவ படத்திற்கு முன்பாக, மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப்பூ, மல்லிப்பூ, போன்ற வாசனை மிகுந்த மலர்களை வைத்து அலங்காகாரம் செய்து கொள்ளுங்கள். பின்னர், உப்பும், மஞ்சளும் வாங்கி திரு உருவ படத்திற்கு முன்பாக, வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பசும் நெய்யினால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, 108 நாணயங்களால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.