இந்த ஐப்பசி மாத அமாவாசை நாளில்...இந்த ஒரு முடிச்சை நிலை வாசலில் கட்டி பாருங்கள்..தீராத துன்பம், வறுமை விலகும்!

First Published | Oct 23, 2022, 9:55 AM IST

Kan thirusti poga nava thaniya mudichu in Tamil: இந்த ஐப்பசி மாத அமாவாசை நாளான இன்று இந்த ஒரே முடிச்சை உங்கள் வீட்டு வாசலில் கட்டி விட்டால் போதும். உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் சேர்ந்து கிடைக்கும்.

நாம் உழைப்பது கஷ்டப்படுவதை எல்லாமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைவதற்காக தான். ஆனால், ஒரு சிலர் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும், பணம், பொருள், செல்வம் என்பது நிற்கவே நிற்காது. இதற்கு நம் கிரக நிலைகள் காரணம் ஒரு புறம் இருந்தாலும், அடுத்தவரின் கண் திருஷ்டி இதில் முக்கியமான பங்காக இருக்கும். இதனால், வரவிற்கு ஏற்ற செலவு வந்து சேரும். கடன் தொல்லை வந்து தொல்லை கொடுக்கும். கெட்ட எண்ணத்தோடு, பொறாமை குணத்தோடு, ஒருவர் வீட்டில் நுழையும் உங்களுக்கு உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு.

இதையெல்லாம் சரி செய்ய இந்த அமாவாசை நாளில் இந்த ஒரே முடிச்சை உங்கள் வீட்டு வாசலில் கட்டி விட்டால் போதும். உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் சேர்த்து கிடைக்கும். அது என்ன முடிச்சு என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

Tap to resize

இந்த ஆண்டில் கடைசி சூரிய கிரகணம் அன்று, அதாவது  தீபாவளிக்கு மறுநாள் ஐப்பசி மாதம் அமாவாசை வருகிறது. இன்றைய தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்யும் போது, இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 

மேலும் படிக்க...தீபாவளி அன்று இந்த 2 பொருளையும் வாங்கி வைத்திருந்தால் போதும், இந்த வருடம் முழுவதும் நமக்கு பண மழை பொழியும்..!

வாழ்க்கையில் தடைகள், கண் திருஷ்டி நீங்க, முதலில் ஒரு சிகப்பு துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நவதானியங்களை வைத்த பிறகு சோழி, கடுக்காய், வசம்பு இவைகளை சேர்த்து முடிச்சாக கட்டிய பிறகு இந்த முடிச்சை அமாவாசை அன்று உங்கள் வீட்டு வாசல் நிலை வாசலில் கட்டி விடுங்கள். 

இதில் சேர்க்கப்படும் சோழி, கடுக்காய், வசம்பு அனைத்திற்கும் அத்தனை திருஷ்டி, எதிர்மறை போன்ற அனைத்து தீய சக்திகளையும் போக்கும் வல்லமையும் இந்தப் பொருள்களுக்கு உண்டு. எனவே நவதானிய தெய்வ சக்தியுடன் தீயதை அழிக்கும் இந்தப் பொருட்களையும் சேர்த்து உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு நிலை வாசலில் முடிச்சாக கட்டும் போது இதை மீறி எந்த ஒரு கெடுதலும் உங்களை நெருங்கவே முடியாது.

இதை மாதம் தோறும் அம்மாவாசை அன்று மாற்றி விட வேண்டும். இது மற்றவர் காலில் படாமல் நீரில் போட்டு விடுங்கள் அது மிகவும் முக்கியம். இதை செய்த பிறகு சில நாட்களிலே நல்ல மாற்றத்தை நீங்கள் உணருவீர்கள்.

மேலும் படிக்க...தீபாவளி அன்று இந்த 2 பொருளையும் வாங்கி வைத்திருந்தால் போதும், இந்த வருடம் முழுவதும் நமக்கு பண மழை பொழியும்..! 

Latest Videos

click me!