God Photos : மறந்தும் இந்த தெய்வங்களின் புகைப்படங்களை வீட்டில் வைக்காதீர்கள்.. கஷ்டம் வந்து சேரலாம்..!

Published : Jul 14, 2025, 12:42 PM IST

பொதுவாக, வீட்டில் அனைத்து தெய்வங்களின் படங்களையும் வைத்து வழிபடலாம். இருப்பினும், சில தெய்வங்களின் படங்கள் அல்லது உருவங்களை வீட்டில் வைக்கக்கூடாது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
14
உக்கிரமான தெய்வங்கள் மற்றும் நவகிரகங்கள்

வீடு என்பது எப்போதும் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். எனவே காளி, துர்கை, கால பைரவர், நரசிம்மர் போன்ற உக்கிரமான தெய்வங்களின் உருவங்களை வீட்டில் வைக்கக்கூடாது. இந்த தெய்வங்களை கோயிலுக்கு சென்று மட்டுமே வணங்க வேண்டும். நம்மை வாட்டி வதைக்கும் தோஷங்களை நீக்கக்கூடியது நவக்கிரகங்கள். நவக்கிரகங்களை வீட்டில் வைப்பது முறையானது அல்ல. நல்ல அதிர்வலைகள் நிரம்பியுள்ள, தெய்வீக அம்சத்துடன் கூடிய கோயில்களில் மட்டுமே சென்று வழிபட வேண்டும் என்பது நியதி.

24
நின்ற கோலத்தில் உள்ள தெய்வங்கள்

பொதுவாக, தெய்வங்களை அமர்ந்த நிலையில் வழிபடுவது நல்லது. எனவே, நின்ற கோலத்தில் உள்ள தெய்வங்களின் உருவங்களை வீட்டில் வைக்கக்கூடாது. குறிப்பாக மகாலட்சுமி போன்ற பெண் தெய்வங்கள் மலர்ந்த தாமரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை மட்டுமே வைக்க வேண்டும். குடும்பத்தில் கணவன், மனைவி சேர்ந்து இருந்தால்தான் குடும்பத்திற்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். எனவே நீங்கள் வைக்கக்கூடிய தெய்வத்தின் படங்கள் அம்பிகையுடன் சேர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அம்பிகை இல்லாத சுவாமியின் புகைப்படங்களை முடிந்த வரை தவிர்த்துக் விடுங்கள்.

34
ஆண்டிக் கோலம் மற்றும் போர் தெய்வங்கள்

ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகன் சிலையை வீட்டில் வைத்திருத்தல் கூடாது. அனைத்தையும் துறந்து, எதுவும் வேண்டாம் என்கிற நிலை என்பதால் இந்த புகைப்படம் அல்லது விக்கிரகத்தை வீட்டில் வைத்திருத்தல் கூடாது. இந்த சிலையை வீட்டில் வைத்திருந்தால் வறுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. போர்க்களத்தில் உள்ள தெய்வங்களின் உருவங்களை வைத்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என கூறுவர். எனவே தெய்வங்கள் சண்டையிடுவது, வதம் செய்வது, போர்க்களத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் அல்லது விக்கிரகங்களையோ வீட்டில் வைத்திருத்தல் கூடாது.

44
உடைந்த சிலைகள்

உடைந்த அல்லது சேதமடைந்த சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது. இறைவனின் சிலைகள் அல்லது புகைப்படங்கள் சேதமடைந்தாலோ அல்லது நிறம் மங்கிப் போனாலோ அதை பூஜித்து ஆற்றில் விட்டு விட்டு புது சிலைகள் அல்லது புகைப்படங்களை வாங்கி பயன்படுத்தலாம். இவை பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் மட்டுமே. இருப்பினும், தனிப்பட்ட விருப்பம் மற்றும் குடும்ப வழக்கப்படி, ஒருவர் எந்த தெய்வத்தின் படத்தை வீட்டில் வைக்கலாம் என்பதை தீர்மானிக்கலாம். குழப்பம் இருப்பின் ஆன்மீக விஷயமறிந்தவர்களின் ஆலோசனையைப் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories