Kanni Deivam : வீட்டில் தீராத கஷ்டமா? உங்கள் வீட்டில் தெய்வமாக இருக்கும் கன்னியை வழிபடுங்கள்

Published : Jul 13, 2025, 05:15 PM IST

பழந்தமிழரின் வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது கன்னி தெய்வ வழிபாடு. கன்னி தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
Kanni Deivaam Valipadu in Tamil

தமிழர் மரபில் பெண்களை தெய்வமாக வழிபடுவது தொன்று தொட்டே இருந்து வருகிறது. மனித குலத்தை விருத்தி அடைய செய்யும் பெண்களை மகா சக்தியாக பாவித்திருக்கிறான் ஆதி தமிழன். அதனால்தான் இன்றும் தமிழகத்தில் சக்தி வழிபாடு பிரபலமாக இருக்கிறது. பழங்கால மரபுக்கும், வரலாற்றுக்கும் இன்றும் நிலவும் சான்று தான் கன்னி வழிபாடு. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை தோன்றி, மணம் முடிக்காமல் கன்னியாகவே இறந்து விட்டால் அவளை வழிபடும் பண்பாடு இன்னமும் தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது குறித்து தெரிவதில்லை. கன்னி தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்? உகந்த மாதம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
கன்னி தெய்வத்தை வழிபடுவது எப்படி?

கன்னி தெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வருபவர்களின் குடும்பம் தழைத்து செழிக்கும். வறுமை நீங்கும். நோய் நொடிகள் தீரும். கன்னி தெய்வம் குடும்பத்தை பாதுகாப்பு அரணாய் நின்று காத்தருளும். கன்னி வழிபாடு பொதுவாக ஆடி மற்றும் தை மாதங்களில் மேற்கொள்வது வழக்கம். பெரும்பாலும் இந்த இரு மாத செவ்வாய்க்கிழமைகளில் கன்னி பூஜை செய்யலாம். தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூஜை செய்து வணங்குவது வழக்கம். பங்குனி உத்திரத்தின் போது கூட கன்னி பூஜை செய்யலாம். கன்னி பூஜை செய்வதற்கு முதலில் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். இதில் மஞ்சள் கிழங்கு, கன்னிகள் இறந்தபோது அவர்களின் வயதிற்கு ஏற்ப பட்டு பாவாடை அல்லது புடவை, கண்ணாடி, சீப்பு, வளையல், மல்லிகைப்பூ, காதோலை, கருகமணி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

35
கன்னிக்கு என்ன படைத்து வழிபட வேண்டும்?

இந்தப் பெட்டிக்கு ‘கன்னிப் பெட்டி’ என்று பெயர். இந்த பெட்டி வைக்கும் பொழுது குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்களுக்கு அருள் வந்து மூர்ச்சையாகி கூட விழலாம். இது சாதாரண நிகழ்வு தான். பூஜையின் பொழுது தலை வாழை இலை விரித்து பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை படைத்து கன்னி தெய்வத்தை நினைத்து மனதார வழிபட வேண்டும். கன்னி தெய்வங்கள் குடும்பத்தினர் கனவில் வந்து கொலுசு, பூ, பட்டுப்பாவாடை ஆகியவற்றை படைக்குமாறு கேட்கும். அத்தகையவர்கள் இது போன்ற பொருட்களை வாங்கி மறக்காமல் படைக்க வேண்டும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இந்த பெட்டியை வைத்து விட வேண்டும்.

45
கன்னியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

இந்த வருட தை மாதத்தில் இந்த பெட்டியை மேலே வைத்தால் அடுத்த வருட தை மாதத்தின் போது தான் இந்த பெட்டியை கீழிறக்க வேண்டும். அப்போது பெட்டிக்குள் வைத்திருந்த மஞ்சள் முளைவிட்டிருந்தால் கன்னி தெய்வம் வீட்டிற்குள் வந்துவிட்டது உறுதியாகும். அதற்குள் வைத்திருந்த துணியை எடுத்து வீட்டில் உள்ள மணமாகாத பெண்கள் உடுத்திக் கொள்ளலாம். இவ்வாறு வருடம் ஒருமுறை உங்கள் வீட்டில் மறைந்த கன்னிப் பெண்களை தெய்வமாக நினைத்து கன்னி வழிபாட்டை செய்யுங்கள். கன்னி வழிபாடானது வீட்டில் இருக்கும் செய்வினைக் கோளாறுகளை நீக்கும். பேய் பிசாசுகள் வீட்டை அண்ட விடாது. அமானுஷ்யங்கள், கண் திருஷ்டி, பில்லி, சூனியம் ஆகிய எதுவும் நம்மை நெருங்காது.

55
வறுமையை நீக்கி வளம் சேர்க்கும் கன்னி தெய்வம்

குடும்பத்தின் வறுமையை கன்னி தீர்த்து வைப்பாள் என்பது காலம் காலமாக நம்பப்பட்டு வரும் நம்பிக்கை. உங்கள் குடும்பம் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறது என்றால் கன்னி வழிபாட்டினை கையில் எடுங்கள். உங்கள் வீட்டில் தெய்வமாய் இருக்கும் கன்னி உங்கள் வறுமையை நீக்கி வாழ்வை வளமாக்குவாள்.

Read more Photos on
click me!

Recommended Stories