Spiritual: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் மந்திரங்கள்! கோடி கோடியாய் பணமழை பொழியும், பொன்மழை கொட்டும்!

Published : Jul 11, 2025, 07:14 AM ISTUpdated : Jul 11, 2025, 07:15 AM IST

சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் பணக் கஷ்டங்கள் நீங்கி, செல்வ வளம் பெருகும். கனகசார சோத்திரம், மகாலட்சுமி மந்திரம், குபேர மந்திரம் போன்றவற்றைச் சொல்வதால் பொருளாதார நிலை உயரும்.

PREV
15
வீட்டில் செல்வம் செழிக்கும்

சில மந்திரங்களை ஜெபித்தாலும், தெய்வங்களை பூஜித்தாலும் நம் பண கஷ்டங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். அதேபோல் சில மந்திரங்கள் நமக்கு செல்வத்தையும் பொன் பொருள் புகழ் மற்றும் வைர வைடூரியங்களை கொடுக்கும். அதனை தெரிந்துகொண்டு மந்திரங்களை மனதார சொல்லும் போது நமது இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். பெருமாள் ஆசி கிட்டும். குபேரன் அருள்பாளிப்பான். செல்வ வளம் பலமடங்கு அதிகரிக்கும். மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியும் மேம்படும். தொழிலில் லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.

25
கடன் இல்லா வாழ்க்கை நிச்சயம்

பொருளாதார வளமும் நிதிச் செழிப்பும் பெற நாம் பல வகையான தெய்வங்களை வணங்கி, புனித மந்திரங்களை ஜபித்து வந்திருக்கின்றோம். அந்த வகையில், கனகசார சோத்திரம் மிகவும் பரிசுத்தமானது என்றும், இதனை முழு மனதுடன் படித்தால் குடும்பத்தில் பொன்மழை பொழியும் என்று நம்பப்படுகிறது. இந்த சோத்திரம் ஸ்ரீ மகாலட்சுமியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. “கனகம்” என்றால் தங்கம், “சார” என்றால் மழை என பொருள். இதை தினமும் பக்தியுடன் ஜபிப்பது வெற்றியும் வளமும் தரும். அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் வகையில் உங்களிடம் செல்வம் தழைத்தோங்கும்.

35
மந்திரம் செய்யும் மாய வித்தை

கனகசார சோத்திரத்தை முழு நம்பிக்கையுடன் சொல்லும்போது, மனம் தூய்மையடைந்து, காரியங்களில் தடைகள் நீங்கி, பிழைகள் மன்னிக்கப்பட்டு, தெய்வீக அருள் கிடைக்கும். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலாத்மிகாயை நமஹ” என்ற பீஜ மந்திரத்துடன் சேர்த்து ஜபித்தால் பலன் விரைவில் தெரியும். ஸ்ரீ மகாலட்சுமியை வெள்ளிக் காலையில் சுபகாலத்தில் புஷ்பங்களால் அலங்கரித்து, மஞ்சளும் குங்குமமும் வைத்து இந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இதனால் பழைய பாக்கிகள், திரும்ப கிடைக்கவே கிடைக்காது என நினைத்த கடன்கள் உள்ளிட்டவை உங்களை தேடிவரும். மேலும் நீங்கள் செய்யும் பணிகளில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில்கள் தொடங்கி அதில் பல மடங்கு லாபம் ஈட்டுவீர்கள்.

45
ஒரே நாளில் பலன் தெரியும்! கோடீஸ்வரன் ஆவீர்கள்

மகாலட்சுமி மந்திரங்களில் “ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ”, “ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஆதிலக்ஷ்மீ நமஹ” போன்றவை Economic Growth, Abundance, Wealth விரும்புபவர்களுக்கு ஏற்றவை. வெள்ளிக்கிழமை, பவுர்ணமி தினங்களில் 108 முறை ஜபித்தால் மகத்தான பலன் தரும். புதிய வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் கிடைப்பதுடன் எடுக்க எடுக்க குறையாக வகையில் பணப்புழக்கம் இருக்கும்.

55
குபேரி மந்திரத்தின் ரகசியம்

இதைத் தவிர, “குபேர மந்திரம்” என்பதும் நிதி வரவை பெருக்கும். “ஓம் யக்‌ஷாய குபேராய வைஶ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய சம்பத்திமே தேஹி தபயஸ்வா மஹாராஜாய நமஹ” என தினமும் சொல்வது சிறந்தது. குபேரரின் வண்ண சிலை அல்லது போட்டோவை வடபகுதியில் வைக்கலாம்.வணங்க வேண்டிய தெய்வங்களில் முக்கியமாக ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ குபேரர், ஸ்ரீ விஷ்ணு ஆகியோரை வழிபட வேண்டும். வீட்டில் தூய்மை, நற்குழப்பம் இல்லாத சூழல் அவசியம்.இவற்றுடன், மன நம்பிக்கை மிக முக்கியம். நம் உழைப்புடன் இந்த மந்திர பலனும் சேரும்போது, வாழ்க்கையில் நிச்சயமாக பொன்மழை பொழியும். இவற்றை அனுசரித்தால் தெய்வத்தின் அருள் உண்டாகி, செல்வத்தோடு ஆனந்தம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories