படுக்கை அறைக்குள் குளியலறை, கழிப்பறை கட்டுவதாக இருந்தால் வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். மற்ற திசைகளில் வைக்க வேண்டாம். வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் படுக்கையறை வைத்திருந்தால் அங்கு குளியலறை, கழிப்பறை அமைக்கலாம்.
குறிப்பாக, வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கழிப்பறை இருக்கை அல்லது கோப்பையை அமைக்கும் திசையும் முக்கியம். அது வடக்கு அல்லது தெற்கு அச்சில் இருக்க வேண்டும். ஒருபோதும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்கக் கூடாது.