பலரும் தங்களது வீட்டில் பலவிதமான செடிகளை வளர்க்கிறார்கள். செடிகளை வளர்த்தால் சுற்றுவது சூழல் தூய்மையாக இருக்கும். நீங்களும் உங்களது வீட்டில் அப்படி செடிகளை வளர்க்கிறீர்களா? அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் மருதாணி செடி இருக்கிறதா? வீட்டில் மருதாணி செடி வளர்க்கலாமா? கூடாதா? என்ற கேள்வி மனதில் இருக்கும். உங்களின் இந்த கேள்விக்கான பதிலை வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
25
மருதாணி செடி :
இந்து பாரம்பரியத்தில் மருதாணிக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. பொதுவாக பெண்கள் தங்களது கைகளில் மருதாணி வைத்துக்கொள்ள விரும்புவார்கள். குறிப்பாக திருமணங்கள், தீபாவளி, தசரா,ல் போன்ற சுப நிகழ்வுகளில். மருதாணி செடி லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும் இது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பது நல்லதல்ல. அதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
35
எதிர்மறை சக்திகள் ஈர்க்கப்படும் :
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருதாணி செடி சில எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ளன. இந்த செடியை குறிப்பாக வீட்டின் பால்கனியில் வளர்த்தால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதி தங்காது. இது தவிர வீட்டின் நேர்மறையான சூழ்நிலை சீர்குலைந்து விடும் என்று வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றன. மேலும் இந்தச் செடி சில சமயங்களில் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள், வேலையில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் நம்புகிறார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் உள்ளே அல்லது வெளியே மருதாணி செடியை வைப்பது வாஸ்துவின் சமநிலையை சீர்குலைத்து விடும் என்று சொல்லப்படுகிறது. இந்த செடியானது வீட்டிற்கு எதிர்மறை சக்தியை கொண்டு வரும் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
55
என்ன செடி வளர்க்கலாம்?
நீங்கள் உங்களது வீட்டில் செடிகளை வளர்க்க விரும்பினால் நல்ல பலன்களை தரும் செடிகளை நட வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக துளசி, மணி பிளான்ட் போன்ற செடிகள் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் பெருகும் என்று கூறப்படுகிறது. மேலும் இவை வீட்டிற்கு மகிழ்ச்சி செல்வம் செழிப்பை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக இந்த செடிகளை வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் நட்டால் வாஸ்து குறைபாடுகள் குறையும்.