கணவன் மனைவிக்குள் தீராத சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்க வழிபட வேண்டிய சில கோவில்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம், தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாடுகள் மன அமைதியையும், உறவில் நல்லிணக்கத்தையும் தர உதவுகின்றன. தமிழகத்தில் குடும்ப உறவில் இருக்கும் பூசல்களை நீக்கும் சக்தி வாய்ந்த கோயில்கள் பல உள்ளன. அத்தகைய சில கோயில்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருமணஞ்சேரி, திருமணம் ஆகாதவர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய தலமாக அறியப்பட்டாலும், திருமணமான தம்பதிகளுக்கு உறவில் ஒற்றுமையை ஏற்படுத்தும் தலமாகவும் அமைந்துள்ளது. இங்கு இறைவன் கல்யாண சுந்தரர் வடிவம் கொண்டு கோகிலாம்பிகையை திருமணம் செய்த தலமாகும். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டால், தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மேலும், இங்குள்ள அம்பிகைக்கு வளையல் காணிக்கை செலுத்தி, வழிபட்டால், மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
36
லால்குடி எடையத்துமங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் ஆலயம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் அமைந்துள்ளது எடையத்துமங்கலம் என்கிற கிராமம். இங்கு உள்ள இறைவன் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரராக காட்சி தருகிறார். மாங்கல்ய மகரிஷியால் திருமண வரம் பெற்ற தலமாகும். இங்கு வழிபடுபவர்களுக்கு திருமண உறவில் உள்ள தடைகள், கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகாமல் தடை ஏற்படுபவர்களும் இந்த தலத்தில் வழிபட்டால் விரைந்து திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
காவிரிக் கரையில் லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து கொண்டிருந்த இறைவியை சோதிக்க விரும்பிய இறைவன், ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என அஞ்சிய அம்பிகை இறைவனை ஆரத்தழுவினார். அப்போது இறைவன் அம்பிகைக்கு காட்சி தந்தார். இறைவன் இறைவியவ தழுவிக் குழைப்பதால் இத்தலம் திருச்சத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் வழிபட்டால் இல்லறம் சிறக்கும் என்றும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் என்பதும் நம்பிக்கை.
56
வைத்தீஸ்வரன் கோயில்
கும்பகோணத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும், மனக்கஷ்டங்களும் தீரும். இக்கோயிலில் சந்நிதி கொண்டுள்ள செல்வ முத்துக்குமரனை வழிபட்டால், தம்பதிகளுக்குள் அன்பு பெருகும் என்பது நம்பிக்கை. ஒன்பது கிரகங்களுள் ஒன்றான அங்காரகன் தொழு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், இங்கு சிவன் வைத்தியநாதசுவாமியாக எழுந்தருளி அவரது பிணி தீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் செவ்வாய் கிரகத்தை குறிக்கும் தலமாகவும் விளங்குகிறது.
66
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
கொங்கு நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற ஏழு சிவஸ்தலங்களில் இரண்டாவது முக்கியமான தலமாக அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. சிவபெருமானும் பார்வதி தேவியும் சரி பாதி உருவமாக அர்த்தநாரீஸ்வரராக இந்த தலத்தில் காட்சியளிக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் மனமும் ஒன்றி, மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் வழிபட வேண்டிய முக்கியமான தலங்களில் இதுவும் ஒன்று.