சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. சந்திர கிரகணம் (lunar eclipse) என்றால் சூரிய ஒளியால் ஏற்படும் பூமியின் நிழலிற்குள்ளாக சந்திரன் கடந்து செல்வது ஆகும். இந்த ஆண்டு சந்திர கிரகணம் விரைவில் நிகழ உள்ளது. வருகின்ற மே 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது.
சந்திர கிரகணம் 2023:
சந்திர கிரகணம் வரும் மே 5ஆம் தேதி இரவு 8:46 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:20 மணிக்கு நிறைவடைகிறது. இந்த கிரகணம் பெனும்பிரல் (Penumbral) சந்திர கிரகணமாக இருக்கும். ஆனால் இது இந்தியாவில் காணப்படாது. இருப்பினும் இந்த கிரக நகர்வினால் சில ராசிக்காரங்களுக்கு தாக்கம் ஏற்படும். நான்கு ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.