பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா? சுப காரியம் தடைப்படுமா..? இதற்கு பின்னாடி இவ்வளவு விஷயம் மறைந்திருக்கா?

First Published | Oct 26, 2022, 2:29 PM IST

Cat Astrology in Tamil: பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம், என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய காலத்தில் என்னதான் அறிவியல் வளர்ச்சி அதிகரித்து காணப்பட்டாலும், கூடவே மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று, வேறு யாராவது அப்பாதையைக் கடந்து சென்றவுடன் தாங்கள் செல்கிறார்கள்.

அதேபோன்று, நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று சொல்வார்கள். உடனடியாக மீண்டும் வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மீண்டும் நம் வேலையை தொடர்வோம். 


பூனை நமது இடபுற பாதையை மறைத்து, வடபக்கமாகப் போவதுதான் பொதுவாக அபசகுனமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை. மேலும் பூனையால் பல நல்ல பலன்களும் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.

 மேலும் படிக்க...உங்கள் காதில் முடி முளைத்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? வாஸ்து,சாஸ்திரம் கூறுவது என்ன..?

பூனை ஒரு வீட்டிற்குள் குட்டி போட்டால், அது நல்லது வீட்டில் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் பார்வையும் நிலையும் நன்றாக இருக்கவில்லை என்றால், அவர் வீட்டில் பூனையை வளர்ப்பது நல்ல பரிகாரமாகக் கருதப்படுகின்றது. 

அதேபோன்று, வீட்டில் பூனை முடியை சிவப்பு துணியில் கட்டி உடன் வைத்திருந்தால், காலசர்ப தோஷம்  கண் திருஷ்டி, பில்லி சுனியம் நீங்கும் என்று கூறப்படுகிறது.

பூனைகள் வீட்டிற்குள் நுழைந்து பாலை குடிப்பது, உங்கள் பண வருவாய்க்கான அறிகுறியாகும்.  

Latest Videos

click me!