குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் இரக்க குணத்துடனும், அவர்கள் மனம் அன்பால் நிறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த மாதங்கள் என்ன? அவர்களின் குணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிறந்த மாதங்களின் அடிப்படையில் ஒருவரின் குணம், அவர்களின் ஆளுமை, பண்புகள் மற்றும் உணர்வு புரிதலை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் தனித்துவமான குணாதிசயங்களை அளிக்கின்றன. சில மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் இதயத்தில் தூய்மை மற்றும் நற்பண்புகளால் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர். இவர்கள் தங்களுடைய அன்பால் அனைவரையும் ஈர்க்கின்றனர். இந்த கட்டுரையில் அத்தகைய தூய இதயம் கொண்டவர்களாக கருதப்படுபவர்கள் பிறந்த மாதங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
25
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளையும் ஆழமாக புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள். இவர்கள் சந்திரனால் ஆளப்படுவதால் இத்தகைய குணாதிசயங்களை கொண்டுள்ளனர். இவர்கள் மற்றவர்களுடன் உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்துகின்றனர். பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். தங்கள் அன்புக்குரியவர்களே மகிழ்விக்க அவர்கள் எந்த எல்லைக்கும் செய்வார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு நேர்மறையான ஆற்றல் இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களை மன்னிக்கும் பெருந்தன்மையும், தவறுகளை மறந்து முன்னேறும் தன்மையும் இவர்களை அன்புக்குரியவர்களாக மாற்றுகிறது.
35
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் கருணையின் வடிவான சுக்கிர பகவானால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் இதயம் எப்போதும் காதலால் நிறைந்திருக்கும். அவர்கள் அனைவர் மீதும் பரிவு கொள்கின்றனர். ஒருவர் கஷ்டப்படும் பொழுது அதை பார்த்துக் கொண்டிருக்கும் குணம் இவர்களுக்கு கிடையாது. மற்றவர்களின் கவலைகளை அவர்கள் முகத்தை வைத்தே பார்த்து புரிந்து கொள்ளும் ஆற்றலை இவர்கள் பெற்றுள்ளனர். பிறர் தங்கள் கஷ்டங்களை சொல்லாத போதும் அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்காக உருகும் மனப்பாங்கு கொண்டவர்கள். தனிப்பட்ட லட்சியங்களை விட அன்பு நிறைந்த உலகத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் இதயம் கருணையில் ஊற்றாக விளங்குகிறது.
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் கிரகங்களின் ராஜாவாக விளங்கும் சூரியனால் ஆளப்படுபவர்கள். இவர்கள் தங்கள் சுற்றி இருப்பவர்களிடம் எப்போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையே விரும்புகின்றனர். சண்டைகள், சச்சரவுகள், பிரச்சனைகள், மோதல்களை இவர்கள் வெறுக்கின்றனர். உறவுகளை முறித்துக் கொள்ள யாரேனும் முயற்சித்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கு பாடுபடுவார்கள். இவர்களின் இதயம் மிகவும் தூய்மையானது. ஒவ்வொருவரின் மனநிலையும் அறிந்து அவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப பழகும் தன்மை இவர்களுக்கு உண்டு. இவர்களின் இதயம் உண்மையான அன்பு மற்றும் விசுவாசித்தால் நிரம்பி இருக்கிறது. இவர்கள் எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பதால் இவர்களின் இதயம் தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிறது.
55
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒருவர் உதவி என்று வந்தால் அவர்களுக்கு எந்த நேரத்திலும் உதவுவதற்கு தயாராக இருப்பார்கள். இவர்களின் இதயம் பரிவு மற்றும் கருணையால் நிரம்பியது. மற்றவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை அடைய உதவுவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. இவர்களின் நேர்மையான குணங்கள் மற்றும் தாராள மனப்பான்மை அவர்களை தூய இதயம் கொண்டவர்களாக மாற்றுகிறது. இவர்களின் எதார்த்தமான அணுகுமுறை மற்றவர்களுக்கு சேவை செய்யத் துடிக்கும் அன்பான இதயம் ஆகியவை இவர்களை தங்கமான மனது கொண்டவர்களாக மாற்றுகிறது. அவர்கள் பிறரின் உதவியை எதிர்பார்த்து எதுவும் செய்வது கிடையாது. தன்னலமற்ற இவர்களின் மனது தூய தங்கத்திற்கு நிகராக ஒப்பிடப்படுகிறது.