மண்ணில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் ஒருவித நம்பிக்கை இருக்கும். பல நேரங்களில் அவர்களின் செயல்கள், அவர்கள் கொண்ட நம்பிக்கையின் நேரடி பிரதிநிதித்துவமாகும். சிலருக்கு மதரீதியான நம்பிக்கைகள் வேடிக்கையாகவும், நியாயமற்றதாகவும் தோன்றுகின்றன. மற்றவர்களுக்கு அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின்படி, சனிக்கிழமை வாரத்தின் மிகவும் மோசமான நாளாகக் கருதப்படுகிறது. சனியின் ஆட்சியில், இந்த நாளில் மக்கள் சில விஷயங்களைத் தவிர்க்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதை துரதிர்ஷ்டம் என நினைக்கிறார்கள்.
சிலர் சனி பகவான் மிகவும் சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவர் என்றும் கருதுகின்றனர். அவரது கோபம் ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் திறன் கொண்டது என்பது ஐதீகம். அவரின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக இந்த நாளில் மக்கள் சில வேலைகளைச் செய்வதையோ அல்லது சில பொருட்களை வாங்குவதையோ மக்கள் தவிர்க்கிறார்கள். எனவே சனிக்கிழமை வாங்கக்கூடாத பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இரும்பு
சனிக்கிழமையன்று இரும்பை வாங்குவது அசுபமாக கருதப்படுகிறது. இந்த நாளில் இரும்பை வீட்டிற்கு கொண்டு வரக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் குடும்ப உறவுகளை பாதிக்கலாம். ஆனாலும் நீங்கள் சனிக்கிழமையன்று இரும்பு பொருட்களை தானம் செய்யலாம், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர உதவுகிறது. வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் சிரமங்களையும் தடைகளையும் நீக்குகிறது.
உப்பு
சனிக்கிழமை உப்பு வாங்கினால் நஷ்டமும், கடனும் அதிகமாகும். ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைகள் சனிக்கிழமைகளில் வீட்டில் உப்பு கொண்டு வரக்கூடாது. இது உங்கள் வியாபாரத்தை குறைக்கலாம். கடன்களை அதிகரிக்கலாம். பங்குச் சந்தையில் நஷ்டத்தையும் சந்திக்கலாம்.
கத்தரிக்கோல்
சனிக்கிழமை வாங்கக்கூடாத பொருட்களில் கத்திரிக்கோலும் ஒன்று. சனிக்கிழமை கத்தரிக்கோல் வாங்குவது, கொடுப்பது நல்லதல்ல. சனிக்கிழமையன்று, கத்தரிக்கோலைத் தொடுவது கூட நன்றியற்றதாக நம்பப்படுகிறது. இது உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சண்டையிடுவதற்கும், உறவுகளை சிதைப்பதற்கும் கூட வழிவகுக்கும். கவனமாக இருங்கள்.
அன்பான வாசகர்களே, இந்த கருத்துக்கள் அனைத்தும் புராணங்கள் அடிப்படையிலும், ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலும் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.