Today Rasipalan 28th Jan 2023 | இன்றைய ராசிபலன்

Published : Jan 28, 2023, 05:30 AM IST

Today Rasipalan 28th Jan 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (28/01/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 28th Jan 2023 | இன்றைய ராசிபலன்
மேஷம்

மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். நல்ல வேலையைத் தொடருங்கள், அதை மிகைப்படுத்தாதீர்கள். உணர்ச்சிகள் உங்கள் பலவீனம். அது உங்களையும் காயப்படுத்தலாம்.
 

212
ரிஷபம்

எந்த முடிவையும் எடுக்க இன்று உகந்த நாள். மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஆன்மீக நிகழ்ச்சிகள் மன அமைதியைத் தரும். தொழில் ரீதியாக இன்று வியாபாரத்தில் வெற்றி இருக்காது.
 

312
மிதுனம்

உங்களின் எதிர்காலத் திட்டங்களை நனவாக்க இதுவே சரியான நேரம். உங்கள் கோபம் வீட்டின் சூழலைக் கெடுக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். இன்று பணியிடத்தில் அதிக வேலை இருக்கும்.
 

412
கடகம்

ஆன்மீக ஆர்வம் கூடும் நாள். தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். சிக விஷயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகள். இல்லாவிடில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
 

512
சிம்மம்

இன்று கிரக நிலைகள் சாதகமாக உள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். பணியிடத்தில் உங்களுக்கு ஒரு புதிய பொறுப்பு வரக்கூடும். குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட மன அமைதி கிட்டும்.
 

612
கன்னி

இன்று சிலருடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஆன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும். இருமல் மற்றும் தலைவலியுடன் உடல் சோர்வு ஏற்படலாம்.
 

712
துலாம்

கடினமான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினருடன் ஒருவித தகராறு ஏற்படலாம். வெளிப்புற நடவடிக்கைகளில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.
 

812
விருச்சிகம்

உங்கள் புதிய திட்டங்களைத் தொடங்க இன்று நல்ல நாள். மதிப்புமிக்க ஒன்றை தவறவிட நேரிடும். சொத்து, வாகனம் தொடர்பான வியாபார நடவடிக்கைகள் மேம்படும். கணவன் மனைவி உறவு இனிமையாகவே இருக்கும்.
 

912
தனுசு

இன்று உங்கள் நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடுவீர்கள். பிற்பகலில் அச்சுறுத்தும் செய்திகள் வந்து சேரலாம். உங்கள் செயல்திறன் பாதிக்கப்படலாம். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
 

1012
மகரம்

நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலை இன்று முடிவடையும் சமூக நடவடிக்கைகளுடன், உங்கள் குடும்ப நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துவது முக்கியம். திருமண வாழ்வில் சிறு சிறு பிரச்சனைகளால் சச்சரவுகள் வரலாம். சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படலாம்.
 

1112
கும்பம்

மன உறுதி ஏற்படும் நாள். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்ய நேரத்தை செலவிடலாம். சில அவசர முடிவுகளை எடுக்க வேண்டி வரும். கணவன் மனைவி உறவில் இனிமை கூடும்.
 

1212
மீனம்

சோம்பல் மற்றும் கோபம் உங்கள் பணிகளை தடைபடுத்தும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நாள் இன்று. சிலர் உங்கள் மீது பொறாமை கொள்ளலாம். தொழில் தொடர்பான விஷயங்களில் நிதானமாக முடிவுகளை எடுங்கள். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் வரலாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories