Published : Jul 30, 2025, 10:44 AM ISTUpdated : Jul 30, 2025, 10:46 AM IST
உங்கள் வீட்டில் அடிக்கடி எறும்புகள் வருவதை கவனத்திருக்கிறீர்களா? இது ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும் ஜோதிட ரீதியாக சில காரணங்கள் கூறப்படுகின்றன. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
எறும்புகள் பொதுவாக கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் சின்னமாக கருதப்படுகின்றன. எறும்புகள் வீட்டிற்கு அதிகமாக வருவதற்கு அறிவியல் ரீதியாக உணவு அல்லது ஈரப்பதம் போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ஆன்மீக அர்த்தங்களும் கூறப்படுகிறது. சில நம்பிக்கைகளின் படி வீட்டில் எறும்புகள் அதிகமாக வருவது விரைவில் நல்ல செய்திகள் அல்லது சுப நிகழ்வுகள் நடக்கப் போவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது நிதி ஆதாயம், திருமண பேச்சு வார்த்தை, புதிய தொழில் தொடங்குதல் போன்ற நேர்மையான விஷயங்களை குறிக்கலாம். எறும்புகள் வரிசையாகவும், ஒழுங்காகவும் செல்வதைப் போலவே உங்கள் வாழ்க்கையும் சீராக செல்ல போகிறது என்பதை உணர்த்துகிறது. இது வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி வருவதை குறிக்கிறது.
25
எறும்புகள் வருகை குறித்து ஜோதிடம் கூறுவது என்ன?
சில ஜோதிடர்கள் எறும்புகளின் வருகையை ராகு கிரகத்தின் தாக்கத்துடன் தொடர்புபடுத்தி கூறுகின்றனர். ராகுவின் சாதகமற்ற நிலை காரணமாக குழப்பங்கள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதே சமயம் ராகுவின் நல்ல நிலையானது அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை தரவல்லது. சில சமயங்களில் எறும்புகளின் வருகையானது கடந்த கால கர்ம வினைகளின் வெளிப்பாடாகவும் கருதலாம் நல்லது செய்தால் நல்லதும், கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்பதை இது உணர்த்துகிறது. எறும்புகள் கர்ம கணக்குகளின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகின்றன. கருப்பு எறும்புகள் உங்கள் வீட்டிற்கு வருவது செல்வ செழிப்பை குறிக்கும். சிவப்பு எறும்புகள் வருவது சிரமங்கள் மற்றும் தேவையற்ற செலவுகளை குறிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
35
சிவப்பு மற்றும் கறுப்பு எறும்புகள்
வீட்டில் அதிகமாக சிவப்பு எறும்புகள் தோன்றினால் அது செலவுகள் அதிகரிக்கும் என்றும், கடன் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. சிவப்பு எறும்புகளின் வருகை உங்கள் நிதிநிலையை பாதிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. அதே சமயம் கருப்பு எறும்புகள் தோன்றினால் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ இருப்பதை குறிக்கிறது. புதிய மாற்றங்கள், புதிய வாய்ப்புகள், வாழ்க்கையில் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை இது குறிக்கிறது. கருப்பு எறும்புகளை விரட்டாமல் மாவு கொடுத்தால் அவை தானாக விலகும் என்று நம்பப்படுகிறது. அரிசியில் கருப்பு எறும்பு தோன்றினால் பதவி உயர்வு, தொழில் வாய்ப்பு, பணவரவு ஆகியவை ஏற்படும் என்றும், தங்கத்தில் இருந்து கருப்பு எறும்புகள் வெளிப்பட்டால் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.
எறும்புகள் எந்த திசையில் இருந்து வருகின்றன என்பதற்கும் ஜோதிடத்தில் சில அர்த்தங்கள் கூறப்படுகிறது. வடக்கு திசையிலிருந்து எறும்புகள் வந்தால் அது நல்ல செய்தியையும், நிதி ஆதாயத்தையும் கொண்டுவரும். தெற்கு திசையிலிருந்து எறும்புகள் வந்தால் நிதி இழப்பு அல்லது கடன் பிரச்சனைகள் ஏற்படலாம். கிழக்கு திசையில் இருந்து எறும்புகள் வருவது நேர்மறையான அறிகுறி ஆகும்.்புதிய வாய்ப்புகள் அல்லது புதிய விஷயத்தை தொடங்கப் போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. மேற்கு திசையிலிருந்து எறும்புகள் வந்தால் அது உங்கள் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாய்ப்புகளை குறிக்கலாம். அறையின் கூரைப் பகுதியில் எறும்புகள் இருந்தால் பண ஆதாயம் பெருகுவதற்கான அறிகுறிகள் ஆகும்.
55
எறும்புகள் வராமல் தடுப்பதற்கான வழிகள்
ஜோதிட ரீதியாக எறும்புகள் வருவதற்கு இத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும் உங்கள் வீட்டில் சுகாதாரத்தை கடைபிடிப்பதும், உணவுப் பொருட்களை மூடி வைப்பதும் எறும்புகள் வராமல் தடுப்பதற்கான வழியாகும். ஒருவேளை எறும்புகள் அதிகமாக வந்தால் அவற்றை கொல்லாமல் சிறிது உணவு அளித்து அவற்றை வெளியேற்றுவது நல்லது. மேற்கூறப்பட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையிலானவே மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.