வீட்டில் எறும்புகள் தொல்லையா? அப்ப ஒரே ஒருமுறை 'இத' மட்டும் யூஸ் பண்ணி பாருங்க!
Home Remedy For Ants : உங்கள் வீட்டில் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை வீட்டில் இருந்து அகற்ற, இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் எறும்புகளை சுலபமாக அகற்றி விடலாம்.
மழைக்காலத்தில் பூச்சிகள் வீட்டிற்குள் வர ஆரம்பிக்கும். குறிப்பாக, சிவப்பு எறும்புகள் வீட்டின் மூலைகளில், சுவர்களிலும் நடமாடுவதை நம்மால் பார்க்க முடியும். இந்த எறும்புகள் சமையலறை, படுக்கையறை என வீடு முழுவதும் வந்து சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த சிவப்பு எறும்பு கடித்தால் உடலில் அரிப்பு ஏற்பட்டு தோல் சிவப்பாக மாறிவிடும். அதுமட்டுமின்றி இந்த எறும்புகள் ஈரப்பதம் காரணமாக மாவு மற்றும் அரிசி ரொட்டி போன்றவற்றில் தங்கிவிடும். மேலும், சப்பாத்தி போன்ற சமைத்த உணவுகளிலும் தங்குவதால் உணவு கெடுவது மட்டுமின்றி பாக்டீரியாவும் பரவுகிறது.
மழைக்காலத்தில் எறும்புகள் வருவது சகஜம்தான். ஆனால், இது உங்கள் வீட்டிலேயே முகாமிட ஆரம்பித்தால் அவற்றை அகற்ற சில எளிய வீட்டு குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்..
எலுமிச்சை: உங்கள் வீட்டிற்கு எறும்பு வராமல் இருக்க எலுமிச்சை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் தரையை துடைக்கும் முன் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பின் சுத்தம் செய்யவும். எலுமிச்சையில் இருந்து வரும் வாசனை எறும்புகளுக்கு பிடிக்காது, ஓடிவிடும். மேலும் எலும்புகளுக்கு இணைப்பு பிடிப்பதால் எலுமிச்சை தோலை ஆங்காங்கே வைக்கவும்.
மிளகு தூள்: எறும்புகளுக்கு மிளகில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே வீட்டின் மூலைகளிலும் எறும்புகள் வரும் இடத்திலும் மிளகு தூளை தூவி விடுங்கள். அதுபோல இதை தண்ணீரில் கலந்து, பின் வீட்டில் நுழைப்பகுதியில் தெளித்தால், எறும்புகள் வீட்டிற்குள் வராது.
இதையும் படிங்க: வீட்டில் எலிகள் அட்டூழியம் பண்ணுதா? உங்களுக்காக நச்சுனு நாலு டிப்ஸ் இதோ!
உப்பு: வீட்டின் மூலையிலோ அல்லது எறும்புகள் வரும் இடத்தில் உப்பை தூவி விடுங்கள். இயற்கையான முறையில் எறும்புகளை அகற்ற இது விட மலிவான வழி எதுவுமில்லை. அதுபோல தண்ணீரும் உப்பு கலந்து கொதிக்க வைத்து, ஆற வைத்து, பிறகு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி அதை வீட்டின் வாசலில் அல்லது எறும்புகள் வரக்கூடிய இடத்தில் தெளித்தால் எறும்புகள் ஒருபோதும் வீட்டிற்குள் வராது.
இதையும் படிங்க: பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர்.. ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி இந்த தப்பு பண்ணமாட்டீங்க!
வெள்ளை வினிகர்: தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகரை சம அளவில் எடுக்கவும், இதில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள் பிறகு நன்கு கலக்கி அதை எறும்புகள் நுழையும் இடத்தில் தெளிக்கவும். தினமும் ஒருமுறை இப்படி தெளித்தால் எறும்புகள் பாதை மாறி உங்கள் வீட்டிற்கு வரது. ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலும் இதை நீங்கள் தெளிக்கலாம்.