அட்சய திருதியை 2025: செல்வம் பெருக! உங்க ராசிக்கு எதை வாங்கனும்? எதை தானம் செய்யனும்?

Published : Apr 28, 2025, 11:36 AM ISTUpdated : Apr 28, 2025, 11:44 AM IST

அட்சய திரிதியை இந்துக்களின் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நாளில் உங்களது ராசிக்கு ஏற்ப எதை தானமாக கொடுக்க வேண்டும் மற்றும் எதை வாங்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
அட்சய திருதியை 2025: செல்வம் பெருக! உங்க ராசிக்கு எதை வாங்கனும்? எதை தானம் செய்யனும்?

Akshaya Tritiya 2025 What To Buy and Donate According To Zodiac Sign For Good Luck : அட்சய திரிதியை இந்துக்களின் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். இந்தியா முழுவதும் இந்து மக்களால் இந்த நாள் கொண்டாடப்படும். இது புதிய தொடக்கங்கள், செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் நாளாகும். இந்த 2025 ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உங்களது ராசிக்கு ஏற்ப சில பொருட்களை வாங்குவதும், தானமாக கொடுப்பதும் ஆசிர்வாதங்கள் மற்றும் செல்வங்களை தரும் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. எனவே உங்களது ராசிக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் மற்றும் எதை தானமாக கொடுக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

25
Akshaya Tritiya 2025 Mesham

மேஷம் : இந்த ராசிக்காரர்கள் இந்த அட்சய திருதியை நாளில் ஒரு சிறிய வெள்ளி அல்லது தங்க நாணயத்தை  வாங்கலாம். தானமாக சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள் அல்லது வெல்லத்தை கொடுக்கலாம்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் அட்சய திருதியை அதிர்ஷ்டத்தை பெற தங்க நாணயங்கள், வெள்ளியில் லட்சுமி தேவியின் சிலையை, நிலம் அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் போன்றவை வாங்கலாம். தானமாக வெள்ளை இனிப்புகள், பால், அரிசி அல்லது ஒருவருக்கு கல்விக்கு நிதி அளிக்கலாம்.

மிதுனம் : இந்த ராசிக்காரர்கள் புதிய தொலைபேசி, மடிக்கணினி, புத்தகங்கள் அல்லது கற்றல் பொருட்களை வாங்குவதன் மூலம் லாபம் அடைவீர்கள். அதுபோல மரகதம் போன்ற பச்சை நிற நகைகளை வாங்குவதும் அதிர்ஷ்டத்திற்கு புதிய கதவு திறக்கும். தானமாக எழுதும் பொருள் பச்சை நிற ஆடைகள் மாணவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து உதவுவது போன்றவை கொடுக்கலாம்.

இதையும் படிங்க:   அட்சய திருதியை 2025 நாளில் கூடும் 10 சுப யோகங்கள்; செல்வ, செழிப்பு இரட்டிப்பாகுமா?

35
Akshaya Tritiya 2025 Kadagam Rasi

கடகம் : கடக ராசிக்காரர்கள் இந்த அட்சய திருதியை நாளில் வீட்டு அலங்காரம், வெள்ளி சமையலறை பொருட்கள் அல்லது நிலத்தில் முதலீடு செய்வது போன்றவற்றை பற்றி யோசிக்கலாம். தானமாக பால் சார்ந்த இனிப்புகள் வெள்ளை உடைகளை கொடுக்கலாம்.

சிம்மம் : இந்த அக்ஷய திருத்த நாளில் சிம்ம ராசிக்காரர்கள் தங்க நகைகள், நாகரிகமான ஆடைகள் அல்லது அவர்களின் கௌரவத்தையும், சுய வெளிப்பாட்டையும் மேம்படுத்தும் எதையும் வாங்கலாம். அதுபோல படைப்பு முயற்சிகளில் முதலீடு செய்வது அதிர்ஷ்டத்தை தரும். தானமாக வெல்லம், கோதுமை அல்லது குழந்தைகளின் கல்வி அல்லது படைப்புத் திட்டங்களுக்கு உதவலாம்.

கன்னி : கன்னி ராசிக்காரர்கள் அட்சய திருத்திய நாளில் தங்க நாணயங்கள், பச்சை இலை செடிகளை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் தானமாக பச்சை நிற ஆடைகளை வழங்கலாம்.

இதையும் படிங்க:  Akshaya Tritiya 2025 : அட்சய திருதியை அன்று எந்த நேரத்துல தங்கம் வாங்குனா பல மடங்கு பெருகும்!

45
Akshaya Tritiya 2025 Thulam Rasi

துலாம் : அட்சய திருதியை நாளில் துலாம் ராசிக்காரர்கள் ஆடம்பரப் பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டமாக இருக்கும். மேலும் வாசனை திரவியங்கள் நாகரிக நகைகள் போன்றவற்றையும் வாங்குங்கள். தானமாக வெள்ளை இனிப்புகள், அழகு சாதன பொருட்கள் அல்லது திருமண செலவுகளுக்கு நிதி அளிப்பது போன்றவை செய்யலாம்.

விருச்சகம் : விருச்சக ராசிக்காரர்கள் அக்ஷய திருத்த நாளில் மூதாதையர் நிலம் போன்ற தொடர்புடைய சொத்துக்களில் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல படிகங்களை வாங்குகங்கள். தானமாக சிவப்பு பயிறு குங்குமப்பூ போன்றவற்றை வழங்கலாம்.

தனுசு : இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் ருத்ராட்ச மணிகள், புத்தகங்கள், கல்வி, பயணம் தொடர்பான பொருட்கள் வாங்கலாம். அதுபோல தங்கம் மூலம் பூசப்பட்ட விஷ்ணு சிலை வாங்குவது செல்வத்தை அதிகரிக்கும். தானமாக ஆன்மீக கல்விக்கு நிதி அளிப்பது உங்களது முன்னேற்றத்தின் கதவு திறக்கும், நல்ல அதிர்ஷ்டம் தரும்.

55
Akshaya Tritiya 2025 Makara Rasi

மகரம் : மகர ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் முதலீடு செய்தல் அல்லது புதிய அலுவலகம் திறப்பு போன்றவற்றை செய்லாம். தானமாக போர்வைகள், கருப்பு எள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுதல் போன்றவற்றை செய்யலாம்.

கும்பம் : இந்த ராசிக்காரர்கள் அட்சய திருத்திய நாளில் வெள்ளி நகைகள் மற்றும் ரத்தின கற்களை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. தானமாக பின்தங்கிய குழந்தைகளுக்கு உணவு, உடை போன்றவை வழங்கலாம்.

மீனம் :  அட்சய திருதியை நாளில் இந்த ராசிக்காரர்கள் மத பொருள்களை வாங்குவது வெற்றியைத் தரும். தனமாக வெள்ளியில் தெய்வ சிலைகள் செய்வது தெய்வீக அருளை பெற உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories