Pawan Kalyan : ராம் சரணிடம் வட்டிக்கு கடன் வாங்கி ஏமாற்றிய பவன் கல்யாண்... ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது..!

First Published Jun 27, 2024, 9:44 AM IST

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாகவும் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாண், நடிகர் ராம் சரணிடம் கடன் வாங்கி உள்ளாராம்.

Pawan Kalyan

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். அவர் சினிமாவை தாண்டி தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார் பவன் கல்யாண். இதில் அவரின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று மாஸ் காட்டியது. அதுமட்டுமின்றி ஆந்திராவிலும் ஆட்சியை கைப்பற்றியது.

power star pawan kalyan

அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளார் பவன் கல்யாண். சிரஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண், தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு தன்னுடைய அண்ணனின் வீட்டுக்கு விசிட் அடித்தார். அப்போது வழிநெடுக மலர்தூவி தம்பிக்கு ராஜமரியாதை அளித்தார் சிரஞ்சீவி. அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண், சட்டென தன் அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து வணங்கியது காண்போரை நெகிழச் செய்தது.

இதையும் படியுங்கள்... ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு... அக்கா, தங்கைகளுக்கு மத்தியில் அழகனாக ஜொலிக்கும் அருண் விஜய்

Ram charan, Pawan kalyan

அதேபோல் பதவியேற்பு விழாவின் போது தன் அண்ணனை பிரதமர் மோடி அருகில் நிற்க வைத்து அவர்கள் இருவரின் ஆசியுடனும் பதவியேற்றுக்கொண்டார் பவன் கல்யாண். இப்படி சிரஞ்சீவி மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மகன் ராம்சரணிடம் கடன் வாங்கி ஏமாற்றி இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அது தான் நிஜம், அந்த சம்பவம் குறித்து பவன் கல்யாணே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Pawan Kalyan borrowed money from Ram Charan

பவன் கல்யாண் இளம் வயதில் கூட்டுக்குடும்பமாக தான் வசித்து வந்துள்ளார். அப்போது சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த சிரஞ்சீவி, தினசரி பவன் கல்யாணுக்கு பாக்கெட் மணி கொடுப்பாராம். பவன் கல்யாணுக்கு மட்டுமின்றி ராம் சரணுக்கும் பாக்கெட் மணி கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம் சிரஞ்சீவி. அப்படி அண்ணன் கொடுக்கும் பணத்தை செலவளித்து முடித்ததும், ராம்சரணிடம் நைசாக பேசி, அவரின் பாக்கெட் மணியையும் வாங்கிவிடுவாராம் பவன் கல்யாண். அதுவும் கடனாக தரும்படி கேட்டு, பின்னர் வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக வாங்குவேன் என்று பவன் கல்யாண் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இப்படி சின்ன புள்ளைய ஏமாத்திருக்கீங்களே, ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... லாஜிக் இடிக்குதே.. 106 வயசுல இந்தியன் தாத்தாவால் எப்படி சண்ட போட முடியும்? சர்ச்சைக்கு ஷங்கர் கொடுத்த விளக்கம்

Latest Videos

click me!