வெற்றிமாறனின் சிஷ்யன் இயக்கிய படம்... சிறை சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ

Published : Dec 25, 2025, 09:56 AM IST

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் சிறை. இப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

PREV
14
Sirai Movie Twitter Review

விக்ரம் பிரபுவின் 25-வது படம் சிறை. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தை சுரேஷ் ராஜகுமாரி என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்தில் அக்‌ஷயகுமார் அறிமுகமாகி இருக்கிறார். சிறை திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக இன்று திரைக்கு வந்துள்ளது. அதன் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காணலாம்.

24
சிறை ட்விட்டர் விமர்சனம்

சிறை இந்த ஆண்டின் சிறந்த படங்களில் சிறை நிச்சயம். அதிகார வர்க்கத்தின் அடியாட்கள் காவல்துறை என்பதை தாண்டி அவர்களின் சிறு அதிகாரத்தை வைத்து எளியவர்கள் பக்கம் நின்றால் காவல் அதிகாரி எளியவனின் கடவுள் ஆகிறான். டாணக்காரன் இயக்குனர் தமிழ் அண்ணா என்பதால் உண்மைக்கு நெருக்கமாகவே இருக்கிறது. போலிஸ் என்றால் இப்படிதான் என்ற பொது புத்தியை தாண்டி அவர்களின் வலிகளை சொல்கிறது.போலிஸாக விக்ரம்பிரபு வாழ்ந்திருக்கிறார். அறிமுக நாயகன் அக்சய், அப்துல் என்ற பெயரை தூக்கி செல்லும் போது நமது மனம் பாரம் ஆகிறது.

இந்த அறிவியல் எத்தகைய பாரத்தை தூக்க மிஷின் கண்டு பிடித்தாலும். ஒருவன் இஸ்லாமிய பெயரை தூக்கி செல்ல எதுவும் இல்லை அதும் எளிதும் இல்லை. அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு அருமை. பிலோமின் ராஜின் எடிட்டிங் சினிமாவாகவும் சரி, எதார்த்தமாகவும் சரி படத்தை அருமையாக கட் செய்திருக்கிறார். நிச்சயம் சிறை பல விருதுகளை பெறும். வாழ்த்துக்கள் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. இந்த சிறையில் எல்லாரும் நிச்சயம் அடைபடுவார்கள், அழுவார்கள், ஆர்ப்பரிப்பார்கள், கொண்டாடுவார்கள் என பதிவிட்டு உள்ளார்.

34
சிறை படம் எப்படி இருக்கு?

சிறை மிக திருத்தமான படைப்பு. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பது வாக்கியம். அப்படி ஒரு காவலர் நண்பனானால் என்ன நடக்கும் என்பதை ஆரம்பம் முதல் இறுதி வரை இறுக்கமான திரைக்கதையால் சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு சென்ற இயக்குனர் சுரேஷ் தன் முதல் திரைப்படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளார். சமூக அக்கறையோடு கூடிய ஒரு வணிக சினிமா வெற்றிபெறுவது என்பது ரொம்பவும் பாராட்டப்படவேண்டியது. அதுதான் வெகுஜனமக்களிடம் அதிகம் சென்றுசேரும்.

படத்தில் நடிகர்கள் பங்களிப்பு அற்புதம். நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் நுணுக்கமான உணர்வுகளை தன்நடிப்பில் வெளிப்படுத்தி தன் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் எனக்கு அந்த காதாபாத்திரத்தை பார்க்கும்போது படத்தின் கதை திரைக்கதை எழுதியுள்ள (டாணாக்காரன்) தமிழ் அவர்களை பார்ப்பது போலவே இருந்தது. மேலும் அறிமுக நடிகரான அக்‌ஷய்குமார் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஜோடியாக நடித்துள்ள அனிஷ்மா பட்டையகிளப்பியுள்ளார். படத்தொகுப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாமே தரம். சிறை நிச்சயம் உங்களை கவரும். படக்குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

44
சிறை எக்ஸ் தள விமர்சனம்

சிறை படம் பார்த்தேன் இந்த வருடம் பார்த்த படங்களில் ஆகச்சிறந்த அனுபவத்தை தந்தபடம். ஒவ்வொரு காவலருக்கும் குறைந்தபட்ச அதிகாரம் இருக்குன்னா அந்த அதிகாரத்தை வைத்து எளிய மக்கள் பக்கம் நிக்கணும்னு சொல்லிருக்க கருத்தும் சரி, அடுத்தடுத்த காட்சிகளோட முடிவுக்காக நெஞ்சை பதைபதைக்க வைத்த திரைக்கதையும் சரி, தரம். விக்ரம் பிரபுவிற்கு தாரள மனது. அக்சயகுமார் என்ற அறிமுக நடிகனை நடிக்க வைத்து ஈகோ இன்றி ரசித்திருக்கிறார்.

படத்தில் மகுடம் சூடும் டெக்னிஷியன் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தான். ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை மனுஷியா தூக்கி நிறுத்தியிருக்க அந்த ஹீரோயின் தங்கத்திற்கு 1000 ஹார்ட்டீன். இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அசுரத்தனமான உழைப்பைக் கொட்டியுள்ளார். தமிழோட கதை வசனம் இரண்டிலும் அவ்வளவு கூர்மை. நல்ல கருத்து, நல்ல எழுத்தோடு கூடிய மேக்கிங்கையும் தொட்டுச்சின்னா அந்தப்படம் ஹிட்டுன்றதுக்கு இந்தச் சிறை உதாரணம் என குறிப்பிட்டு உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories