பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான 'கொம்புசீவி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
விஜயகாந்த் மகள் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம் கொம்புசீவி. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி உள்ளார். இப்படத்தில் சண்முகப்பாண்டியன் ஜோடியாக தர்னிகா, என்கிற புதுமுக நடிகை நடித்துள்ளார். மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் உலகமெங்கும் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த நிலையில், கொம்புசீவி படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
24
கொம்புசீவி விமர்சனம்
'கொம்புசீவி' முதல் பாதி, பரபரப்பான அதிரடி காட்சிகளுடன் விறுவிறுப்பாக செல்ல, இரண்டாம் பாதியில் எமோஷன் காட்சிகளையும் நகைச்சுவையையும் அழகாகக் கலந்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் 1996-ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது, ஊர் பகை, சாதி மோதல்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் ஆகியவற்றில் சிக்கும் நாயகன், அந்த பிரச்சனைகளை எப்படி கையாள்கிறார் என்பதே படத்தின் கதைக்கரு. இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் சண்முகபாண்டியன் மற்றும் சரத்குமார் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தான்.
34
கொம்புசீவி படம் எப்படி இருக்கு?
சண்முக பாண்டியன் நடிப்பில் நல்ல தேர்ச்சி. ஆக்சன் காட்சிகளில் மிரட்டுகிறார். காலை தூக்கி அடிச்சா அப்படியே கேப்டன் மாதிரி இருக்கிறார். சரத்குமார் காமெடியில் இறங்கி அதகளம் செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ஹீரோயின் தர்னிகா, அழகு பதுமையோடு இருக்கிறார். யுவனின் இசையில் பாடல்கள் செம்மையா இருக்கு. குறிப்பா இடைவேளையில் வரும் கருப்பன் பாட்டு ஃபயர் மோடு. பின்னணி இசை மிகவும் இனிமையாக இருக்கிறது; குறிப்பாக “வஸ்தாரா” பாடல், காட்சியமைப்பிலும் இசையிலும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.
திரைக்கதையில் பொன்ராம் தன் படங்களின் பாணியையே கையாள, வசனங்கள் பேசுறதும் அதே மாடுலேஷன்ல இருக்கு, மற்றபடி தன் முந்தைய படைப்புகளிலிருந்து மாறுபட்ட விதத்தில் இப்படத்தை வழங்கியுள்ளார். காமெடி நல்லா ஒர்க் ஆகியிருக்கு. காமெடியுடன் காட்சிகள் நகரும்போது பெருசா எதுவும் தொய்வில்லை. ஒரு சில காமெடிகள் இன்னும் நல்லா எழுதியருக்கலாம். லாஜிக் எல்லாம் பார்க்காம ஜாலியா இருந்தா போதும்னு பார்ப்பவர்களுக்கு இப்படம் பக்கா ட்ரீட். மொத்தத்தில் இது ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கிறது.