
மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின்னர் வடிவேலுவும், பகத் பாசிலும் இணைந்து நடித்துள்ள படம் மாரீசன். இப்படத்தை சுதீஷ் சங்கர் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் வடிவேலு வேலாயுதம் என்கிற கதாபாத்திரத்திலும் பகத் பாசில் தயா என்கிற கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
இப்படத்தின் கதைப்படி மறதி நோய் உள்ள வடிவேலு ஏடிஎம்மில் படம் எடுக்க சென்றபோது பின் நம்பரை மறந்துவிடுகிறார். திருடனான பகத் பாசில் அவருக்கு உதவ வந்தபோது அவரிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்துகொண்டு அதை அபேஸ் செய்ய திட்டமிடுகிறார். இதனால் திருவண்ணாமலை செல்ல வேண்டிய வடிவேலுவை நாகர்கோவிலில் இருந்து பைக்கிலேயே அழைத்து செல்கிறார். இந்த பயணத்தின் போது வடிவேலுவிடம் இருந்து பகத் பாசில் பணத்தை திருடினாரா? இல்லையா? என்பது தான் கதை. இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
மாரீசன் திருப்பங்களுடன் நன்றாக எழுதப்பட்ட திரில்லர் படம். வடிவேலுவின் நடிப்பு அற்புதம். பகத் பாசிலின் நடிப்பு நேர்த்தியாக உள்ளது. முதல் பாதி கதை மெதுவாக இருந்தாலும் இடைவேளைக்கு பின் படம் பிக் அப் ஆக தொடங்குகிறது, இரண்டாம் பாதி முழுக்க திரில்லர் பாணிக்கு மாறுகிறது. முழுவதும் ஈர்க்கக்கூடிய திரைக்கதையுடன் கூடிய இப்படத்தில் சலிப்பூட்டும் தருணங்கள் எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படமாக உள்ளது மாரீசன் என பதிவிட்டுள்ளார்.
திருப்பங்களால் பிரமிக்க வைக்கும் ஒரு திரில்லர் படம் தான் இந்த மாரீசன். குறிப்பாக இடைவேளையின் திருப்பமும், கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளும் உங்களை ஆர்வத்துடன் வைத்திருக்கின்றன. தமிழில் 90கள் மற்றும் 2000த்தில் பல பெரிய ஹீரோக்களின் கனவாக இருந்த ஒரு பாத்திரத்தை, வடிவேலு ஏற்று நடித்திருக்கிறார். பகத் பாசில் மீண்டும் ஒரு திருடனாக நடித்து கவர்ந்திருக்கிறார். யுவனின் இசை
பல சந்தர்ப்பங்களில் சோதனை முறையில் செல்கிறது, அது சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர் தனது அப்பா இளையராஜாவின் பிரபலமான பாடலை பயன்படுத்தி உள்ளார். அது சூப்பராக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, மாரீசன் த்ரில்லர் பிரியர்களுக்கானது என குறிப்பிட்டுள்ளார்.
மாரீசன் திரைப்படம் மெதுவாக ஆரம்பம் ஆனாலும், இண்டர்வெல் காட்சி அருமையாக உள்ளது. இரண்டாம் பாதியும் விறுவிறுப்பாக இருக்கிறது. சில ஒன் லைன் காமெடிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளன. கடைசியில் நல்ல சோசியல் மெசேஜ். வழக்கம்போல் அருமையான நடிப்பால் வடிவேலுவும், பகத் பாசிலும் கவர்ந்திருக்கிறார்கள். ஒர்த்தான படம் என பதிவிட்டுள்ளார்.