Karuppu Review : சூர்யாவின் கருப்பு பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ

Published : May 15, 2026, 12:44 PM IST

Karuppu Twitter Review : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள கருப்பு திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

PREV
16
Karuppu Twitter Review

நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் முதன்முறையாக நடித்துள்ள படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இப்படத்தில் சூர்யா உடன் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, ஷிவதா, சுவாசிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு குட்டி அனிருத் என செல்லமாக அழைக்கப்படும் சாய் அபயங்கர் தான் இசையமைத்துள்ளார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கருப்பு திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆனது. அப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

26
கருப்பு ரிலீஸ்

கருப்பு திரைப்படத்தை காண காலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தியேட்டர் முன் அதகளப்படுத்தினர். குறிப்பாக நடிகர் கார்த்தி, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகை திரிஷா, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோர் கருப்பு திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் கண்டுகளித்தனர். கருப்பு படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களை அள்ளிவீசி வருகின்றனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

36
கருப்பு ட்விட்டர் விமர்சனம்

ஆக்‌ஷன் மற்றும் எமோஷனலாக இருந்த முதல் பாதியை தொடர்ந்து கமர்ஷியல் அம்சங்களுடன் பயணித்த இரண்டாம் பாதியில் நிறைய மாஸ் மொமண்ட்ஸ் மற்றும் ரெபரன்ஸுகள் உள்ளன. கருப்புசாமியாக சூர்யா தன்னுடைய கதாபாத்திரத்தை வேற லெவலில் செய்திருக்கிறார். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் ரைட்டிங் மற்றும் சாய் அபயங்கரின் பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. திரிஷா, நட்டி மற்றும் இதர நடிகர், நடிகைகள் கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள். இண்டர்வெல் சீன், ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் பாடல்கள் தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். மொத்தத்தில் ஒர்த்தான படம். கண்டிப்பா தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என பதிவிட்டு உள்ளார்.

46
கருப்பு ரிவ்யூ

கருப்பு பக்கா கமர்ஷியல் சினிமா. ப்ரீ கிளைமாக்ஸ் விஷுவல் ட்ரீட் ஆக அமைந்துள்ளது. அந்த காட்சி மட்டும் கொடுத்த டிக்கெட் காசுக்கு ஒர்த் ஆக இருக்கும். சூர்யா அண்ணா நீங்க ஜெயிச்சிட்டீங்க. ஆர்.ஜே.பாலாஜி அண்ணா நீங்க இல்லேனா இது சாத்தியமே இல்ல. ரொம்ப நாளா சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்த வெற்றி வந்திருக்கு. குறைகள் இருக்கு, அதை கிண்ட வேண்டாம். குடும்பத்தோட சேர்ந்து என்ஜாய் பண்ணுங்க மக்கா. ஒர்த்தான படம் என குறிப்பிட்டுள்ளார்.

56
கருப்பு எக்ஸ் தள விமர்சனம்

கருப்பு திரைப்படத்தின் முதல் பாதி அருமையாகவும், இரண்டாம் பாதி மாஸ் ஆகவும் உள்ளது. இண்டர்வெல் காட்சியும், ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியும் வேற லெவலில் இருக்கிறது. ஓஜி சூர்யா இஸ் பேக். என்ன ஒரு எனர்ஜி. ஆர்.ஜே. பாலாஜி பக்கா கமர்ஷியல் ரைட்டிங் சூப்பர். அன்பான ரசிகர்கள் உங்களை என்றென்றும் கொண்டாடுவார்கள். நிறைய சர்ப்ரைஸுகளும், நிறைய ரெபரன்ஸுகளும் இருக்கு. அவையெல்லாம் உங்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும். சாய் அபயங்கர் பிஜிஎம் சூப்பர். அதிலும் Verrapa பாடல் அருமை. மொத்தத்தில் இது பைசா வசூல் சம்பவம் என பதிவிட்டுள்ளார்.

66
கருப்பு படம் எப்படி இருக்கு?

ஆக்‌ஷன், எமோஷன், விசிலடிக்கும் காட்சிகள் நிறைந்த பக்கா கமர்ஷியல் படம் தான் கருப்பு. சூர்யா தன்னுடைய பவர்ஃபுல்லான ஸ்கிரீன் பிரசன்ஸால் ஆதிக்கம் செலுத்தி உள்ளார். சாய் அபயங்கரின் அதகளமான பின்னணி இசை திரையரங்க அனுபவத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது. திரிஷாவுக்கு க்யூட்டான ரோல், அதில் அழகு பதுமையுடன் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பும் அருமை. சண்டைக் காட்சிகள், எமோஷனல் கனெக்ட், கமர்ஷியல் ட்ரீட்மெண்ட் ஒர்க் ஆகி உள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை கொண்டாட்டம் தான். பார்ட் 2-வுக்கான லீடும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories