சரத்குமார், நீண்ட முடி, அடர்ந்த தாடி என ஒரு மிரட்டலான தோற்றத்தில் 'மூர்த்தி'யாக வாழ்ந்திருக்கிறார். அதிக வசனங்கள் பேசாமல், தனது உடல்மொழியாலேயே முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. இந்திரஜித் ஜெகஜித், நாயகனாக நடித்திருக்கும் இவர், புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். சரத்குமாருக்கு இணையான மோதல் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
தேவிகா சதீஷ், சரத்குமார் மகளாக வந்து மனதை ஈர்க்கிறார். வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ் உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.