கில்லி போல் சொல்லி அடித்ததா மாரி - துருவ் கூட்டணி..? பைசன் காளமாடன் விமர்சனம் இதோ

Published : Oct 17, 2025, 09:06 AM ISTUpdated : Oct 17, 2025, 09:08 AM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Bison Kaalamaadan Movie Twitter Review

பைசன் காளமாடன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 5-வது படம். தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், தற்போது துருவ் விக்ரமை வைத்து ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தை கொடுத்திருக்கிறார். அதுதான் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ரெஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

பைசன் காளமாடன் திரைப்படம் தமிழ்நாட்டை சேர்ந்த கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி விருந்தாக இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பார்த்தவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்கள் விமர்சனங்களை அள்ளிவீசி வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

25
பைசன் ட்விட்டர் விமர்சனம்

பைசன் உலகெங்கிலும் மனங்களை வென்று வருகிறது. முதல் பாதி நன்றாக ஸ்டேஜை செட் பண்ணுகிறது. இரண்டாம் பாதி பவர்ஃபுல்லான எமோஷன்களாலும், விறுவிறுப்பான கபடி போட்டிகளாலும் மிளிர்கிறது. துருவ் அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பசுபதி தன்னுடைய அக்மார்க் நடிப்பால் தனித்து தெரிகிறார். அமீர் மற்றும் லாலின் கதாபாத்திரம் கதைக்கு வலு சேர்த்துள்ளது. இசை படத்தோடு ஒன்றி, நல்ல அனுபவத்தை தருகிறது. பைசன் காளமாடன், ஒரு தேசிய கபடி வீரரின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என குறிப்பிட்டுள்ளார்.

35
பைசன் எப்படி இருக்கு?

துருவ் விக்ரம் நடிப்பு, உழைப்பு, அவர் கேரக்டர், பசுபதி, அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், லால் நடிப்பு, சர்ச்சை இல்லாத பாசிட்டிவ் கருத்து, மாரிசெல்வராஜ் கரு, திரைக்கதை, ஸ்போர்ட்ஸ் பின்னணி, இரண்டாம் பாதி, இசை, ஒளிப்பதிவு படத்தை வெற்றி பெற வைக்கிறது என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

45
பைசன் விமர்சனம்

துருவ் விக்ரம் : ஒரு நட்சத்திரம் பிறந்திருக்கிறார். பைசன் படத்திற்காக அவர் மனதளவிலும், உடல் அளவிலும் கடின உழைப்பை போட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். உண்மையான கபடி வீரனாகவே விளையாடி இருக்கிறார். முதல் பாதியில் துருவின் ஆக்‌ஷன் காட்சிகளும், இரண்டாம் பாதியில் அவரின் எமோஷனல் காட்சிகளும் டாப் நாட்ச் ஆக உள்ளது. மொத்தத்தில் துருவ் தான் உண்மையான பைசன் என குறிப்பிட்டுள்ளார்.

55
பைசன் ரிவ்யூ

பைசன்: காளமாடனின் (கிட்டாவின்) வெற்றி மட்டும் அல்ல ராஜியின் வெற்றியும் கூட! அடக்குமுறையையும், சாதியச் சவால்களும் நிறைந்த சமூகத்தில் #பைசன் ஒரு எதிர்ப்பின் ஒலியாக பீறிடுகிறது. பகைமையை வேரறுக்க, விளையாட்டை ஆயுதமாக்கி, அநியாயத்தை எதிர்க்கும் குரலாய், பைசனை நேர்த்தியோடு உருவாக்கியிருக்கும் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், தொடர்ந்து சமூகத்திற்கு தேவையான படைப்புகளை ஊக்கப்படுத்தி இச்சமூகத்தின் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்து வரும் பா. இரஞ்சித் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories