பிரதீப் ரங்கநாதனின் டியூட்... சரவெடியாக இருந்ததா? புஸ்ஸுனு போனதா? - விமர்சனம் இதோ

Published : Oct 17, 2025, 08:08 AM IST

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கும் டியூட் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Dude Twitter Review

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள மூன்றாவது திரைப்படம் டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டியூட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் வெளியாகும் முதல் தமிழ் படம் டியூட். இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார்.

25
டியூட் ரிலீஸ்

டியூட் திரைப்படத்தில் சரத்குமார், டிராவிட் செல்வம், நேகா ஷெட்டி, ஹ்ரிது ஹரூன், சத்யா, ரோகிணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ரொமாண்டிக் - காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் டியூட் திரைப்படத்தை தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக இன்று திரைக்கு வந்துள்ளது. லவ் டுடே, டிராகன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா? இல்லையா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

35
டியூட் ட்விட்டர் விமர்சனம்

டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் ஸ்டைல், மமிதா பைஜு உடனான அவரின் காம்போ அருமையாக உள்ளது. சரத்குமாருக்கு நேர்த்தியான வேடம். அதில் அவர் மிளிர்கிறார். ஹிருது நல்ல தேர்வு. சாய் அபயங்கரின் இசை ஓகே ரகம் தான். படம் ஸ்லோவாக ஸ்டார் ஆகி, இண்டர்வெலுக்கு முந்தைய 20 நிமிடம் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு உள்ளது. கிளைமாக்ஸில் நடிப்பு இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். எமோஷனல் கனெக்ட் கம்மியாக இருந்தாலும், காமெடியால் படம் நகர்கிறது. ஒருமுறை பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

45
டியூட் எப்படி இருக்கு?

டியூட் திரைப்படத்தின் முதல் பாதி மெதுவாக செல்கிறது. ஆனால் இண்டர்வெல் பிளாக் எதிர்பாரா ட்விஸ்ட் உடன் இருக்கிறது. இரண்டாம் பாதி அதகளமாக ஆரம்பமாகி, கிளைமாக்ஸில் ட்விஸ்டுகளுடன் நிறைவடைந்துள்ளது. மொத்தத்தில் டியூட் தீபாவளி வின்னர் என குறிப்பிட்டு ஃபயர் எமோஜிகளை பறக்கவிட்டிருக்கிறார்.

55
டியூட் விமர்சனம்

டியூட், ஒரு நடுத்தரமான ரோம் காம் படம். முதல் பாதி ரசிக்கும்படி இருந்தாலும், இரண்டாம் பாதி மந்தமாக இருக்கிறது. வழக்கமான ரோம் காம் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளது. படம் ஸ்லோவாக ஸ்டார்ட் ஆனாலும் இடைவேளைக்கு முன் வேகம் எடுக்கிறது. இண்டர்வெல் காட்சியும் அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி நன்றாக தொடங்கினாலும் திரைக்கதை உடனடியாக படுத்துவிட்டது, அதன்பின் எழவே இல்லை.

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் நல்ல ஆற்றலுடன் படத்தை உருவாக்கி இருந்தாலும் திரைக்கதை எதிர்பார்த்த அளவு இல்லை. குறிப்பாக இரண்டாம் பாதி மந்தமாக உள்ளது. எதிர்பார்த்தபடியே பிரதீப் ரங்கநாதனும், மமிதாவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சாய் அபயங்கருக்கு ஒரு அற்புதமான அறிமுகப்படம், தேவைப்படும்போதெல்லாம் அவரின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. எடிட்டிங் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆன சில மொமண்டுகள் இருந்தாலும், எமோஷனல் கனெக்ட் இல்லை. காமெடியும் சில இடங்களில் தான் ஒர்க் அவுட் ஆகி உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories