
நடிகர் ரஜினிகாந்தின் 171வது படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதற்கு முன்னர் விஜய், கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய லோகேஷ் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானுயர இருந்தது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொண்டிருந்தார்.
கூலி பான் இந்தியா படமாக உருவாகி உள்ளதால், இதில் நாகர்ஜுனா, அமீர்கான், சேபின் ஷாஹிர் போன்ற பான் இந்தியா நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார். கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. வெளிநாடுகளில் தான் இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அங்கு படம் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
கூலி படத்தை அமெரிக்காவில் பார்த்த பிரபல விமர்சகர் ஒருவர் போட்டுள்ள பதிவில், கூலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கவர்கிறார். பிளாஷ்பேக் டீ ஏஜிங் காட்சிகள் மாஸாக உள்ளது. சோபின் ஷாஹிருக்கு முழுநீள வேடம். நாகர்ஜுனா ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார். ஆனால் அவரது கதாபாத்திர வடிவமைப்பு சரியில்லை. ஸ்ருதி மற்றும் ரச்சிதா நன்கு நடித்துள்ளார்கள். அனிருத் சிறப்பாக இசையமைத்துள்ளார். வீக்கான கண்டெண்ட் மற்றும் மந்தமான திரைக்கதை. ஆக்ஷன் காட்சிகள் அருமை. மொத்தத்தில் படம் ஆவரேஜ் தான். கூலி - போலி என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் புது இண்டஸ்ட்ரி ஹிட் கூலி. அருமையான ரைட்டிங், மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகள், வெறித்தனமான பிளாஷ்பேக். லியோவில் எதெல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லையோ அதெல்லாம் கூலியில் ஒர்க் ஆகி இருக்கிறது. பிளாஷ்பேக் அருமை. இரண்டாம் பாதி வெறித்தனமாக உள்ளது. பிளாக்பஸ்டர் என குறிப்பிட்டு இருக்கிறார்.
கூலி படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், கூலி படத்தின் முதல் பாதி ஆவரேஜ் தான். ஆனால் இரண்டாம் பாதி கேமியோக்கள் உடன் அருமையாக உள்ளது. ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சோபின், ஸ்ருதி ஆகியோரின் நடிப்பு நன்றாக உள்ளது. இந்த படத்தின் உயிர்நாடியாக அனிருத் இருக்கிறார் என பதிவிட்டு இப்படத்திற்கு 5க்கு 2.75 மார்க் கொடுத்துள்ளார்.
கூலி முதல் பாதி விறுசிறுவென, ஸ்டைலிஷ் ஆக உள்ளது. பாடல்கள் அனைத்தும் நன்கு ஒர்க் ஆகி இருக்கின்றன. ஹாஸ்டல் சண்டைக் காட்சி சிறப்பாகவும் ஃபன் நிறைந்ததாகவும் உள்ளது. இரண்டாம் பாதி ஸ்லோவாக ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்தில் வேகமெடுத்து இறுதிவரை மான்ஸ்டர் போல் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்தப்படத்தை காப்பாற்றியதே அதன் இரண்டாம் பாதி தான். தாஹா மற்றும் கூலி கேங் வெறித்தனமாக உள்ளது. கூலி ஒரு மாஸ் மான்ஸ்டர் என பதிவிட்டுள்ளார்.
கூலி படத்தின் முதல் பாதி ஆவரேஜாகவும், இரண்டாம் பாதி அபவ் ஆவரேஜ் ஆகவும் உள்ளது. உங்களுக்கு ரஜினியை பிடிக்கும் என்றால் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும். காமன் ஆடியன்ஸுக்கு இது ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக இருக்கும். இது அடல்ட்டுக்கான படம் தயவு செய்து குழந்தைகளை அழைத்து வராதீர்கள். ஏனெனில் படத்தில் எக்கச்சக்கமான வயலன்ஸ் நிறைந்திருக்கிறது என வார்னிங் கொடுத்துள்ளார்.
துபாயில் கூலி FDFS பார்த்த ரசிகர் ஒருவர் போட்டுள்ள பதிவில், தலைவர் பட்டைய கிளப்பிட்டாரு, 50வது வருசத்துக்கு இப்படி ஒரு படம் கொடுத்த லோகேஷ்க்கு நன்றி, அரங்கம் அதிருது சூப்பர் ஸ்டார் மற்றும் அனைத்து நடிகர்களும் செமையா நடிச்சிருக்காங்க, படம் பிளாக்பஸ்டர், எட்ரா கொக்கிய என அனல்பறக்க பதிவிட்டுள்ளார்.