த்ரிஷ்யம் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப், பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரை வைத்து இயக்கி உள்ள வலது வஷாத்தே கள்ளன் என்கிற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'வலது வஷாத்தே கள்ளன்'. இப்படம் உணர்ச்சிகரமான ஒரு கிரைம் டிராமா என்று வெளியீட்டிற்கு முன்பு இயக்குநர் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
பிஜு மேனன் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் இது. ஆண்டனி சேவியர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஆண்டனி எந்த தொழில் செய்தாலும் அதை நேர்மையான வழியில் பார்ப்பவர் அல்ல என்பதை முதல் காட்சியிலேயே இயக்குநர் காட்டியிருக்கிறார். பின்னர், ஆண்டனியின் பின்னணியை ஜீத்து ஜோசப் இன்னும் விரிவாக விளக்குகிறார். அதில் அவரது மகனும் வருகிறார். ஆண்டனி சேவியரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒருவர் கதைக்குள் நுழையும்போது, 'வலது வஷாத்தே கள்ளன்' படத்தின் காட்சிகள் பதட்டத்தையும் வேகத்தையும் கூட்டுகின்றன.
24
ஜீத்து ஜோசப் படம் எப்படி இருக்கு?
ஜோஜு ஜார்ஜின் சாமுவேல் ஜோசப் தான் அந்த கதாபாத்திரம். வழக்கம்போல, கதைக்களத்தை நிறுவ ஜீத்து ஜோசப் சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார். அவசரப்படாமல், இரு கதாபாத்திரங்களையும், தொடக்கத்தில் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டி அவர்களின் மற்ற விஷயங்களையும் இயக்குநர் விவரிக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்போது, படம் வேகமெடுக்கிறது. முன்பு கூறியது போல், இரண்டு சிறந்த நடிகர்கள் நேருக்கு நேர் மோதுவதுதான் படத்தின் யுஎஸ்பி. அதைப் பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சியை படம் தருகிறது.
34
வலது வஷாத்தே கள்ளன் விமர்சனம்
பிஜு மேனன் பல போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும், ஆண்டனி சேவியர் அவர்களிடமிருந்து வேறுபட்டவர். அருகில் இருப்பவர்களுக்கும் எளிதில் பிடிபடாத ஒருவர். ஜோஜு ஜார்ஜுக்காக வடிவமைக்கப்பட்டது போலவும், ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாகவும் சாமுவேல் ஜோசப் கேரக்டர் உள்ளது. அனாதையாக வளர்ந்து, திறமையால் படித்து முன்னேறியவர். இப்போது குடும்பம் மட்டுமே அவரது சொத்தாக இருந்தாலும், தொழில்நுட்பத் துறையில் அவருக்கிருந்த திறமை எங்கும் போகவில்லை. கே.ஆர். கோகுல், லீனா, வைஷ்ணவி ராஜ், இர்ஷாத் ஆகியோர் இப்படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டினு தாமஸ் ஈலன் இந்த ஜீத்து ஜோசப் படத்தின் கதையை எழுதியுள்ளார். ஜீத்துவின் வழக்கமான ஒளிப்பதிவாளர் சதீஷ் குரூப் 'வலது வஷாத்தே கள்ளன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரின் மனதை அறிந்த ஒளிப்பதிவாளர், அவருக்குத் தேவையானதை வழங்கியுள்ளார். வி.எஸ். விநாயக் எடிட்டர். விஷ்ணு ஷ்யாம் இசையமைத்துள்ளார். 'ஸ்டைல் ஓவர் சப்ஸ்டன்ஸ்' என்ற பெயரை ஒருபோதும் பெறாதவர் ஜீத்து ஜோசப். இப்படத்திலும் அதை அவர் தொடவில்லை. தனக்குச் சொல்ல வேண்டிய கதை, பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய உணர்வுகள் ஆகியவற்றை இம்முறையும் அவர் எளிமையாகக் கொண்டு சேர்த்துள்ளார். அதோடு, இன்றைய காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றையும் இப்படம் நினைவூட்டுகிறது. படத்திலிருந்து நாம் எடுத்துச் செல்வதும் அதுதான்.