Jailer 2 Full Movie Review : ரஜினி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? ஜெயிலர் 2 விமர்சனம் இதோ

Published : Oct 15, 2026, 08:35 AM IST

Jailer 2 Twitter Review : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கிறது என்பதை நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

PREV
16
Jailer 2 Full Movie Twitter Review

2026-ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்த படம் ஜெயிலர் 2. இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்றதால், ஜெயிலர் 2 படத்திற்கு ஓவர் ஹைப் இருந்தது. அந்த ஹைப்பை அதிகரிக்காமல் படக்குழு அடக்கி வாசித்தது என்றே சொல்லலாம். இப்படத்தின் ப்ரமோஷனில் தொடங்கி ரிலீஸ் வரை எந்த வித அலப்பறையும் இன்றி நார்மலாகவே படக்குழு ஒவ்வொரு நகர்வையும் செய்து வந்தது. சொல்லப்போனால் இப்படத்திற்கு ஆடியோ லாஞ்சே வைக்காமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

26
பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஜெயிலர் 2

ஜெயிலர் முதல் பாகம் ரிலீஸ் ஆனபோது அதன் ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் மற்றும் கலாநிதி மாறன் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆனது. அதையெல்லாம் தவிர்க்கவே இப்படத்திற்கு ஆடியோ லாஞ்ச் வைக்காமல் ரிலீஸ் செய்துள்ளனர். ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி வெளிநாடுகளில் இன்று அதிகாலை போடப்பட்டது. அங்கு படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

36
ஜெயிலர் 2 ட்விட்டர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல், நெல்சனின் நகைச்சுவை, அனிருத்தின் அதிரடியான பின்னணி இசை எனப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருக்கிறது ஜெயிலர் 2. ஆனால், முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவது படத்திற்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

முதல் பாதியில் நெல்சனின் டார்க் ஹியூமர் பல இடங்களில் நன்றாகக் கைகொடுக்கிறது. ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகளும், அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. குறிப்பாக, ரஜினியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது.

இரண்டாம் பாதியில் திரைக்கதை தடுமாறத் தொடங்குகிறது. எஸ்.ஜே. சூர்யா மற்றும் வித்யா பாலன் தொடர்பான காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், கேமியோக்களும் முதல் பாகத்தைப் போல வலுவான தருணங்களை உருவாக்கத் தவறுகின்றன.

மொத்தத்தில், ரஜினியின் மாஸ், நகைச்சுவை, பின்னணி இசை ஆகியவை ஆங்காங்கே ரசிக்க வைத்தாலும், பலவீனமான இரண்டாம் பாதியால் ஆவரேஜ் சீக்குவெல் படமாகவே ஜெயிலர் 2 அமைகிறது என குறிப்பிட்டுள்ளார்.

46
ஜெயிலர் 2 எக்ஸ் தள விமர்சனம்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் பாதி அட்டகாசமாக அமைந்துள்ள நிலையில், இரண்டாம் பாதி வழக்கமான மசாலா அம்சங்களுடனும், அளவுக்கு அதிகமான மாஸ் காட்சிகளுடனும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை பல திசைகளில் பயணித்தாலும், குறைவான பட நேரத்தில் ரஜினியின் மாஸ் தருணங்களை முன்வைத்து நெல்சன் படத்தின் குறைகளை ஓரளவுக்குச் சமாளித்துள்ளார். அனிருத் மீண்டும் தனது பின்னணி இசையால் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷனின் பங்களிப்பும் கவனிக்க வைக்கிறது. பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்புகளும் படத்தின் பிளஸ். எஸ்.ஜே. சூர்யாவின் குடும்பத்தை மையமாகக் கொண்ட வில்லத்தனமான கதைக்களம் இன்னும் சிறப்பாக அமைந்திருந்தால், படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்திருக்கலாம். மொத்தத்தில், ரஜினிகாந்த் – நெல்சன் – அனிருத் கூட்டணியில் உருவான ஜெயிலர் 2, முதல் பாகத்தின் உயரத்தை எட்டாவிட்டாலும் ரசிக்கக்கூடிய கமர்ஷியல் என்டர்டெய்னர். திரையரங்கில் ஒருமுறை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

56
ஜெயிலர் 2 எப்படி இருக்கு?

ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதி ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. ஆனால், முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாதியிலும் ஏற்ற இறக்கங்கள் அதிகம். ஆங்காங்கே வரும் விறுவிறுப்பான காட்சிகளும் மாஸ் தருணங்களும் படத்தை ஒருமுறை ரசித்துப் பார்க்க வைக்கின்றன. படத்தில் இடம்பெறும் கேமியோக்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன.

கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் கொடுப்பதில் நெல்சன் திறமையானவர் என்றாலும், முழுப் படத்தையும் சீரான அனுபவமாக மாற்றுவதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மொத்தத்தில், மாஸ் காட்சிகளும் நகைச்சுவையும் ரசிக்க வைத்தாலும், திரைக்கதையின் ஏற்ற இறக்கங்களால் ஜெயிலர் 2 ஒருமுறை பார்க்கக்கூடிய பொழுதுபோக்குப் படமாக அமைகிறது என குறிப்பிட்டுள்ளார்.

66
ஜெயிலர் 2 ரிவ்யூ

இரண்டாம் பாதியில் நகைச்சுவையைவிட ஆக்‌ஷன் காட்சிகளும், எதிர்பாராத கேமியோக்களும், மாஸ் எலிவேஷன் தருணங்களும் அதிகம் இடம்பெற்றுள்ளன. பல காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களைக் கவர்கிறது. மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா, சிவராஜ்குமார் என ஒவ்வொருவரும் தங்களது பாணியில் கவனம் ஈர்க்கின்றனர். அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு மாஸ் காட்சிக்கும் கூடுதல் வலு சேர்க்கிறது.

திரைக்கதையில் சில தொய்வுகள் இருந்தாலும், குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா மற்றும் வித்யா பாலன் கதாபாத்திரங்களின் நகர்வு எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்து வரும் மாஸ் காட்சிகள் படத்தைத் தொய்வின்றி ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில், ரஜினியின் மாஸ், அதிரடி ஆக்‌ஷன், அதிரடி கேமியோக்கள் என மீண்டும் ஒரு 'ஹுக்கும்' அனுபவத்தைத் தருகிறது ஜெயிலர் 2 என பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories