சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ள டீசல் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பின்னர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள படம் டீசல். இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் கருணாஸ், வினய், ஜாகீர், சாய் குமார், விவேக் பிரசன்னா, அனன்யா, கேபிஒய் தீனா, தங்கதுரை என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். அவரின் இசையில் வெளியான பீர் சாங் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
ஹரிஷ் கல்யாணின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் டீசல் தான். டீசல் மாஃபியா கும்பலை பற்றிய கதையுடன் இப்படம் இன்று தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
25
டீசல் ட்விட்டர் விமர்சனம்
டீசல்" ஆக்ஷன் திரில்லராக அமைந்துள்ளது. எண்ணெய் கடத்தல் என்ற ஒரு கறுப்பு உலகத்தை மையமாகக் கொண்டு, வித்தியாசமான ஹீஸ்ட் கதையை சொல்ல முயல்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது அதன் விசுவல் ஸ்டைல். சில இடங்களில், குறிப்பாக முதல் பாதியில், கதையின் வேகம் மெதுவாக செல்கிறது. தமிழில் இதுவரை அதிகம் காணாத எண்ணெய் கடத்தலை மையமாகக் கொண்ட ஹீஸ்ட் திரில்லர் கதையாக டீசல் இருக்கிறது. ஆனால், நேர்த்தியான கதை கட்டமைப்பு இல்லாததால் படம் சில இடங்களில் தடுமாறுகிறது என பதிவிட்டு உள்ளார்.
35
டீசம் படம் எப்படி இருக்கு?
டீசல் - முதல் பாதியில் வழக்கமான கேங்ஸ்டர் படம் போல தொடங்கி இரண்டாம் பாதி முற்றிலும் சமூக - அரசியல் த்ரில்லர் ஜானருக்கு மாறுகிறது. ஹரிஷ் கல்யாண் அற்புதமாக நடித்துள்ளார், இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி உள்ளார். அதுல்யா அழகாக இருக்கிறார், நன்றாக நடித்துள்ளார். திபு பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது. இயக்குனர் சண்முகம் ஒரு அற்புதமான மெசேஜ் உடன் ஒரு தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார், ஆனால் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
டீசல் - ஹரிஷ் கல்யாண் முழு படத்தையும் தன்னுடைய தோளில் சுமந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இயக்குனர் சண்முகம் முத்துசாமி எண்ணெய் அரசியலைப் பற்றி பேசும் ஒரு சமூக பொறுப்புள்ள படத்தை வழங்கியுள்ளார். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது & இரண்டாம் பாதி டிராமா ஜோனுக்குள் நுழைகிறது. அதுல்யரவி, வினய் ராய் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
55
டீசல் ரிவ்யூ
டீசல் - 90களின் முற்பகுதியிலிருந்து 2014 வரை இருந்த எண்ணெய் மாஃபியாவைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தில் தனது கம்பர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து வட சென்னை இளைஞனாக அற்புதமாக நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இயக்குனர் சண்முகம் முத்துசாமி, இரண்டாம் பாதியில் ஏ.ஆர். முருகதாஸின் கத்தி படத்தை போல் வழங்க முயற்சித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.