செங்கோட்டையனுக்கு ஆப்பு..! ஆத்திரத்தில் ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்..! புஸ்ஸியை புதுச்சேரி அரசியலுக்கு அனுப்பும் விஜய்..!

Published : Nov 28, 2025, 09:46 PM IST

விஜய் தன்னுடன் செங்கோட்டையன் சேர்ந்துள்ளதால் புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி அரசியலுக்கு அனுப்பலாமா? என யோசிக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

PREV
14

‘‘அண்ணனோட அரசியல் அனுபவம், கட்சிக்கு நல்ல பயன் தரும்’’ என்று நினைக்கும் விஜய் செங்கோட்டையனுக்கு உச்சபட்ச மரியாதையை கொடுத்து வருகிறார். தனக்கு அடுத்த இடத்தில் இப்போது இருக்கிற புஸ்ஸி ஆனந்தைத புதுச்சேரிக்கு பொறுப்பாளரா பொறுப்பாளராக போட்டு அங்கே கட்சியை வலுப்படுத்த அனுப்பலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் போல, செங்கோட்டையனை தனது அரசியலுக்கு மையப்படுத்த முடிவெடுத்துள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.

24

இதுவரை விஜய் நினைத்தால்தான் அவருடன் யாரும் பேசமுடியும், தொடர்பு கொள்ள முடியும் என இருந்த நிலைமை இப்போது மாறி இருக்கிறது. செங்கோட்டையன் தன்னை நேரடியாக தொடர்புகொண்டு பேசலாம் என விஜய் சொல்லி இருக்கிறாராம். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளில் அஞ்சலி செலுத்திவிட்டு தவெகவில் சேர வேண்டும் நினைத்த செங்கோட்டையனை, அங்கே சென்றால் மீடியாக்காரர்கள் துரத்துவார்கள், கட்சியில் சேர்ந்த பிறகு போகலாம் என விஜய் தரப்பிலிருந்து சொல்லப்பட அப்படியே செய்தாராம் செங்கோட்டையன்.

34

கட்சியில் இணைந்து விட்டு சமாதிகளுக்கு போனது செங்கோட்டையனுடன் தவெகவின் முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைத்த விஜய், பெரிய தொண்டர் பட்டாளத்தையே அனுப்பி, செங்கோட்டையனை குஷி படுத்திவிட்டார் விஜய். இது ஒருபுறமிருக்க, செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது பற்றி, எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்டபோது,‘‘ கட்சியில் இல்லாத ஒருவரை பற்றி பேசமாட்டேன்’’ என்று பதில் சொல்லியிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் 30 ஆம் தேதி அடுத்த கட்ட பிரச்சாரை தொடங்குகிற எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதை விட, மூன்று மடங்கு கூட்டத்தை கூட்ட நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

44

ஈரோடு மாவட்டத்திலும், கோபிசெட்டிபாளையத்திலும் செல்வாக்கில்லாதவர் செங்கோட்டையன் என தனக்கு கூடுகிற கூட்டத்தின் மூலமாக நிரூபித்து பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. அவர் இப்படி திட்டமிட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி போலவே செங்கோட்டையனும் கோபிசெட்டிபாளையத்திற்கு விஜயை அழைத்து வந்து, மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்துள்ளதாக விஜய்யிடம் சொல்ல, அவரும் சம்மதம் சொல்லிவிட்டாராம். ஒழுங்குபடுத்தப்படாத கூட்டம் என விமர்சிக்கப்படும் விஜய் பிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தி, கட்டுக்கோப்பான கூட்டம் என நிரூபிக்க விஜயின் கோபி பிரச்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார் செங்கோட்டையன். இந்நிலையில் தவெகவில் இணைந்த பிறகு கோபி சென்ற செங்கோட்டையனுக்கு கூடிய கூட்டத்தைப்பார்த்து அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories