திமுகவில் இணைக்க யாரும் என்னிடம் முயற்சி செய்யவில்லை என செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார், ஆனாலும் கூட, ரகசியமாக சில திமுக அமைச்சர்கள் முயற்சிகள் செய்தனர். ஆனால், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இந்த அசைன்மென்டை முழுமையாக முடிதது செங்கோட்டையனை இணைத்ததில் முக்கிய பங்காற்றியவர் ஆதவ் அர்ஜுனா. அதிமுகவில் செங்கோட்டையனுக்கு பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும்போதே தவெகவின் ஆதவ் அர்ஜூனா தரப்பினர் அவருடன் தொடர்ந்து பேசி வந்தனர். விஜய், செங்கோட்டையனுடன் பேசுவதற்கு முன்பே மூன்று சிட்டிங் தவெக தரப்பில் உட்கார்ந்து என்ன மாதிரி செயல்படலாம்? எப்படி கொண்டு போகலாம்? என பேசி இருக்கிறார்கள்.
அதன்பிறகே நவம்பர் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். அவர் தவெகவில் இணைந்த பிறகு மேலும் சில விஷயங்களை தீவிரப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது செங்கோட்டையன் போலவே முக்கியமான எதிர்கட்சிகள் இருக்கக்கூடிய முக்கிய முகங்களை தவெக பக்கம் கொண்டு வரக்கூடிய ஆபரேஷஷனையும் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது செங்கோட்டையனை இணைத்ததன் மூலமாக ஒரு முக்கியமான மெசேஜையும் விஜய் கொடுக்கிறார். அதிமுகவுக்கான கூட்டணியை கேட்டை ஓங்கி தடாலடியாக இழுத்து மூடி இருக்கிறார்.