‘‘நான் போகிற இடமெல்லாம் மின்சாரத்தை தடை பண்றாங்க. எங்களை பார்த்து அவ்வளவு பயமா?’’ என விஜய் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் விஜய் நான் வருகிறேன் பயணத்தில் பயணத்தில் பேசிய விஜய், ‘‘இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணங்கள் பற்றியும், தீர்வுகள் பற்றியும் மதுரை மாநாட்டில் நான் பேசினேன். அதுவொரு தப்பா? மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நம் கடமை, உரிமைதானே? நான் என்ன இன்று நேற்றா மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறேன்? இதே நாகையில் 14 வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 22, 2011-ல் மீன்வர்கள் தாக்கப்பட்டது குறித்து பொதுக்கூட்டம் நடத்தினோம்தானே...
இந்த விஜய் களத்துக்கு வர்றது ஒன்னும் புதுசில்ல கண்ணா. முன்பு விஜய் மக்கள் இயக்கமா வருவோம்.இப்போது தவெக என்ற அரசியல் இயக்கமா வர்றோம். அவ்வளவுதான் வித்தியாசம். அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காக நிற்போம். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. கொள்கையை பெயரளவில் மட்டுமே வைத்துக் கொண்டு குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் நீங்களா? இல்லை தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் ஒருவனாக இருக்கும் நானா? என்று போட்டி போட்டு பார்த்து விடுவோம்? ரெடியா ஸ்டாலின் சார்? சிம்.எ.சார் தெரியாம கேக்கறேன்..! ஆர்எஸ்எஸ்காரர்கள் வந்தால் கரண்ட் கட் பண்ணுவீங்களா? அமித் ஷா, மோடி வந்தால் கரண்டை கட் பண்ணுவீங்களா? பேஸ்ட்மென்ட் ஆடிடும்.
34
தில்லா நேர்மையா எலக்சனை சந்திக்க வாங்க சார்
வெளிநாட்டில் முதலீடா? வெளிநாட்டு முதலீடா? சிஎம் சார், உங்க மனசை தொட்டு சொல்லுங்கள். குடும்பத்தை வச்சிட்டு கொள்ளை அடிக்கிற உங்களுக்கே இவ்ளோ இருந்தா, சொந்தமா உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும். பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுட்டு, நேர்மையா வாங்க பாக்கலாம். குடும்பத்தை வச்சு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கிற நீங்களா? இல்லை தமிழ்நாட்டில இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் ஒருத்தனா இருக்கிற நானா பார்த்துடலாம் சார். குடும்பத்தின் வளர்ச்சியையும், சுயநலனையும் பாதுகாக்கவே அரசு நினைக்கிறது. பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா நேர்மையா எலக்சனை சந்திக்க வாங்க சார்
இந்த முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி’ என அடுக்குமொழியில் பேசுவோரை கேட்டு கேட்டு, நம் காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்’’ எனப்பேசினார் விஜய்.