Why Jayalalithaa lost 1996 election? : 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாடு அரசியலில் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் 1996 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் முதல் ஆட்சி காலமான 1991-1996ல் பல ஊழல் புகார்கள் எழுந்தன. முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
26
வளர்ப்பு மகன் திருமணம்
1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா தனது தோழி சசிகலாவின் அக்கா மகனான சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். அவருக்கு நடத்திய பிரம்மாண்ட திருமணம் பொதுமக்கள் இடையே மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அன்றைய காலத்திலேயே சுமார் ரூ.100 கோடி செலவு செய்து இந்த திருமணத்தை ஜெயலலிதா நடத்தி இருந்தார். இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆடம்பரத்தின் உச்சமாக கருதப்பட்டது. மேலும் அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியுடன் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நேரடி மோதல் மற்றும் அரசு எந்திரத்தின் செயல்பாடுகள் மக்களால் விமர்சிக்கப்பட்டன.
36
தாமாக துவக்கம்
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்தது. இதை தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே மூப்பனார் கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று அளித்த பேட்டி நடுநிலை வாக்காளர்களை முழுமையாக திமுக - தாமாக கூட்டணி பக்கம் திருப்பியது.
1996 ஆம் ஆண்டு திமுக, தாமாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி மொத்தமுள்ள 234 இடங்களில் 221 இடங்களை வென்று சாதனை படைத்தது. அதில் திமுக 173 இடங்களையும், தாமாக 39 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும், கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகள் ஒரு இடத்தையும் பிடித்திருந்தன. 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் திமுக அதிகபட்ச இடங்களை பிடித்த தேர்தலாக 1996 தேர்தல் அமைந்தது.
56
படுதோல்வியை சந்தித்த ஜெயலலிதா
திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக தமிழக வரலாற்றிலேயே கடுமையான பின்னடைவை சந்தித்தது. அதிமுக வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா இளம் வயது திமுக வேட்பாளரான சுகவனம் என்பவரிடம் படுதோல்வியை சந்தித்தார். சுமார் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா தோல்வியைத் தழுவினார். 173 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மு. கருணாநிதி தமிழகத்தின் நான்காவது முறையாக முதலமைச்சரானார்.
66
சொத்துக்குவிப்பு வழக்கு
இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஜெயலலிதா மீது பல பல்வேறு ஊழல் வழக்குகள் பாய்ந்தன. அவர் முதலமைச்சராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தோல்வியில் இருந்து பாடம் கற்ற அவர், 2001 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் என்பது தமிழக அரசியலில் மற்றொரு சுவாரஸ்யமான பக்கமாகும்.