தமிழக வெற்றி கழகம், அதனுடைய தலைவர் விஜய், ஒரு அரசியல் கட்சியை தலைமை ஏற்று நடத்துகிற பக்குவத்தை இழந்து, மதி இழந்து தன்னுடைய கருத்து அல்லது கொள்கை அல்லது தத்துவம் எதையும் தொண்டர்களுக்கு கடத்தாமல், வெறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசை வீழ்த்துவது மட்டும்தான் ஒரே நோக்கம் என்று சொல்லுகிற விஜய், திராவிட முன்னேற்ற கழகத்தை ஏன் வீழ்த்த வேண்டும்? என்று கூறாமல் தமிழக வெற்றி கழகத்துக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்கிறார். தமிழக வெற்றி கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் போட்டி என்றால் இன்று தமிழக வெற்றிகள் விஜயும் பொறுப்புக்கு வந்தால், ஆட்சிக்கு வந்தால், நாட்டில் என்ன மாறுதலை தரப்போகிறேன் என்று சொல்லவில்லை.
இதுவரை ஊடகத்தையே சந்திக்காத, சந்திப்பதற்கு அஞ்சுகிற உலகத்திலேயே ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அது தமிழக வெற்றிக்கழகம் மட்டும்தான். அறிவு சார்ந்த அரசியல் ஆய்வாளர்களோடு, விமர்சிகர்களோடு உரையாடலையே நடத்தாத, குடும்ப உறுப்பினர்களுடைய உறவை துண்டித்துக் கொண்டிருக்கிற விஜய், கட்சியினுடைய நிர்வாகிகளுடன் உறவாடாத விஜய், தனித்து வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வதில் சுகப்பட்டு கிடக்கிற விஜய், வெகுஜன மக்களை அரவணைத்து நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்து, இந்த ஜனநாயகம் சுதந்திரம், மக்களாட்சி தத்துவத்தின் மணிமகுடமாக இருக்கிற தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியலை, தன்னுடைய அதிகாரத்தை நிறுவுவதற்கு முயற்சிக்கிறேன் என்று சொல்லுவது பிழையானது.