கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இ.பி.எஸ். சசிகலாவின் முடிவால்தான் எல்லாம் நடந்தது. கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் இ.பி.எஸ் சிபிஐ விசாரணை கோராதது ஏன்? எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் இ.பி.எஸ், கொடநாடு வழக்கில் மட்டும் ஏன் குரல் கொடுக்கவில்லை? இதிலிருந்து யார் திமுகவின் பி-டீம் என்பது புரியும்.
2009-ல் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் இ.பி.எஸ். உழைத்தவர்களை மறந்து பணக்காரர்களுக்கு எம்.பி. சீட் கொடுத்தவர். சசிகலாவையே கொச்சைப்படுத்தியவர். நான்கரை ஆண்டு ஆட்சிக்கு உதவிய பாஜகவுக்கு துரோகம் செய்தவர். தவெக கொடியைப் பார்த்ததும் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக இ.பி.எஸ் கூறுகிறார். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.