சசிகலா அவசரப்பட்டு தான் முதலமைச்சராகிவிட்டால் ஜெயிலுக்கு போகாமல் இருக்கலாம் என்று யாரோ சொன்ன ஐடியாவை கேட்டு முடிவெடுத்து விட்டார். இவர் எம்எல்ஏக்கள் பெரும்பான்மை எனச் சொல்லி கவர்னரிடம் கொடுக்க, கவர்னர் மகாராஷ்டிரா போய்விட்டார். அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டார். நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து சரியாக இருந்தது. பெரும்பான்மையாக இருந்தால் சிஎம் ஆக்க வேண்டியது தானே? ஏன் ஆக்கவில்லை என பிரச்சனை வரும்போது அங்கிருந்து ஜட்ஜ்மெண்ட் வரப்போகுது போகிறது என்று அறிவித்து விட்டார்கள். கவர்னரோ நான் தீர்ப்பு வரப்போகிறது என்று பார்த்துவிட்டு செய்கிறேன். இன்றைக்கு முதலமைச்சராகி விட்டு நாளை ஜெயிலுக்கு போனால் நன்றாக இருக்காது என்று தள்ளி வைத்து விட்டார்.
சசிகலா சிறைக்கு சென்று விட்டார். அடுத்த செங்கோட்டையனுக்கு வாய்ப்பு கிடைத்தது, அவர் நிராகரித்து விட்டார். அடுத்து எடப்பாடிக்கு அந்த வாய்ப்பு போய் சேர்ந்தது. அவர் அதை பயன்படுத்திக் கொண்டார். 4 வருடம் ஆட்சி நடத்தி விட்டார். கட்சியும் அவரிடம் சென்று விட்டது. இப்போது அவரை நான் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டேன், தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் எடப்பாடி பழனிச்சாமி என்ன மகாத்மா காந்தியா? அவர் மகான் இல்லையே மனுஷன் தானே. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் அவருக்கு ஆபத்து என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும். அவரிடம் சென்று ஒவ்வொருத்தராக மல்லுக்கட்ட, மல்லுக்கட்ட அவர் ஒவ்வொருவரையாக நீக்கி கொண்டிருக்கிறார். அவரை பாதுகாத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.