Published : Oct 28, 2025, 11:13 AM ISTUpdated : Oct 28, 2025, 11:16 AM IST
கரூர் கூட்ட நெரிசலில் தனது கணவர் ரமேஷை இழந்த அவரது மனைவி சங்கவி, விஜய் கரூருக்கு நேரில் வராத காரணத்தைக் கூறி, தவெக அனுப்பிய 20 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பி இருந்தார். இந்நிலையில் ஒரு அரசியல் கட்சி 30 லட்சம் பேரம் பேசிய கூறப்படுகிறது.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் உறவினர்கள், விஜயை சந்திக்காமல் இருக்க உள்ளூர் அரசியல் பிரமுகர் ₹30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
விஜய்யை மாமல்லபுரத்தில் சந்திக்காமல் இருக்க உள்ளூர் திமுக தலைவர் 30 லட்சம் ரூபாய் கொடுக்க தன்னிடம் பேரம்பேசியதாக கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவரின் குடும்பதார் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரபரப்பை கிளப்பியுள்ளது. ஆங்கில செய்தி நிறுவனமான thesouthfirst ‘‘கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் உறவினர்கள், விஜயை சந்திக்காமல் இருக்க உள்ளூர் அரசியல் பிரமுகர் ₹30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக’’ செய்தி வெளியிட்டுள்ளது.
24
மனம் உடைந்து அழுத விஜய்
பாதுகாப்பு, அனுமதி கிடைக்காத காரணங்களால் கரூர் செல்ல இயலாத தவெக தலைவர் விஜய், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை மாமல்லபுரம் ஹோட்டலில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் கலந்து கொள்ள மறுத்தனர். மாமல்லபுரத்டிற்கு வந்த பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருடனும் தனித்தனியாக 30 நிமிடங்கள் வரை பேசி ஆறுதல் கூறினார் விஜய். கூட்டத்தில் கலந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள், விஜய் அவர்களுடன் பேசும்போது மனம் உடைந்து அழுததாக அவர்கள் கூறினர்.
சந்திப்பின் போது, விஜய் அவர்களிடம், “உங்கள் குடும்பத்திற்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், நான் அதைச் செய்வேன். என்னிடம் எதையும் கேளுங்கள் - உங்களுக்கு வேலை தேவைப்பட்டால், நான் அதை ஏற்பாடு செய்வேன். உங்களுக்கு கல்வி உதவி தேவைப்பட்டால், நான் அதை வழங்குவேன். உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும், என்னிடம் சொல்லுங்கள்” என்று வாக்குறுதிகளை அளித்ததாகக் கூறப்படுகிறது.
34
கதறி அழுத விஜய்
இதுகுறித்து, நெரிசலில் தனது உறவினர்களை இழந்த ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவர், “விஜய் சார் எங்களுடன் அரை மணி நேரம் பேசினார். பேசிக் கொண்டிருக்கும்போதே மனம் உடைந்து அழுதார். எனக்கு என்ன தேவை என்று கேட்டார், ஆனால் நான் அவரிடம் எதுவும் வேண்டாம் - என் குழந்தைகள் போய்விட்டார்கள் என்று சொன்னேன். அவர்கள் சில காப்பீட்டு உதவிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், நான் இடம் பெயர்ந்து புதிய வேலை தேட விரும்பினால் அவர்கள் உதவலாம் என்றும் சொன்னார்கள், ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
முன்னர் நாங்கள் வீடியோ அழைப்பில் பேசியபோது, எனக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே இருந்தது. விஜய் சார் என் குழந்தைகளின் படத்தை வைத்திருக்கும் புகைப்படம் வேண்டும் என்று நான் விரும்பினேன். பேரணியில் அவரைப் பார்க்க முயன்றபோது என் குழந்தைகள் இறந்தனர். இன்று, அந்த ஆசை நிறைவேறியுள்ளது. அவர் என்குழந்தைகள் படத்துடன் ஒரு புகைப்படத்தை எடுத்தார்.
கூட்டத்திற்கு முந்தைய நாள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் எனது உறவினர்களைத் தொடர்பு கொண்டு, விஜய்யுடன் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்க ₹30 லட்சம் வழங்குவதாக பேசினர். கரூரிலிருந்து எங்களை அழைத்து வந்த பேருந்து ஓட்டுநரைக் கூட மிரட்டி, மாமல்லபுரத்திற்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக’’ என அவர் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் தனது கணவர் ரமேஷை இழந்த அவரது மனைவி சங்கவி, விஜய் கரூருக்கு நேரில் வராத காரணத்தைக் கூறி, தவெக அனுப்பிய 20 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பி இருந்தார். இந்நிலையில் உள்ளூர் அரசியல் பிரமுகன் 30 லட்சம் பேரம் பேசிய விவகாரம் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.