சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை ஷோபா. தன் அம்மா ஷோபாவுக்காக சென்னை, கொரட்டூரில் ஒரு பாபா கோயிலையே கட்டிக் கொடுத்திருக்கிறார் விஜய். ஆனால், விஜய் எந்த கோவிலுக்கும் செல்கிற பழக்கம் இல்லாதவர். கரூர் சம்பவம், ஜனநாயகம் சென்சார் பிரச்சினை என விஜய்க்கு வந்திருக்கிற சோதனைகளை கடந்து தேர்தலில் விஜயின் வியூகங்கள் நிறைவேற வேண்டும் என்று அவரது நீலாங்கரை வீட்டில் மகனை உட்கார வைத்து யாகம் செய்து பூஜை செய்து இருக்கிறார் ஷோபா. கூடவே விஜய்யின் கையில் ஒரு காப்பும் போட்டு ‘‘இனி உனக்கு பாபா துணையிருப்பார். துணிந்து களத்தில் இறங்கு’’ என்று ஆசீர்வாதம் செய்திருக்கிறாராம் விஜயின் அம்மா ஷோபா.