இந்த சட்டமன்ற தொகுதியில்தான் அதிகமான முதல் தலைமுறை வாக்காளர்கள், ஐடி ஊழியர்கள், தமிழர்கள் அல்லாத நகரவாசிகள் அதிகம் இருக்காங்கள். சென்னைக்குள்ளேயே தொகுதி இருப்பதால் பிரச்சாரத்துக்கும் வசதியாக இருக்கும் என யோசிக்கிறாராம் விஜய்.
விஜய் போட்டியிடப்போவதாக சொல்லப்பட்ட தொகுதிகளின் லிஸ்டை அடுக்கிக் கொண்டே போகலாம். முதல் மாநாடான விக்ரவாண்டியில் நடந்த மாநாட்டுக்கு முன்பாகவே மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட போகிறார். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தார்கள். அந்த போஸ்டர் மூலமாக மாநாட்டுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்து இருந்தார்கள். அடுத்து தர்மபுரி மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிவா, விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போகிறார் என ஒரு முறை சொல்லி இருந்தார். ‘‘நான் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிற தொகுதிகளில்தான் தலைவர் வந்து போட்டியிடனும்னு சொல்லி இருக்கேன். இண்ட மண் அதியமான், ஒளவையார் வாழ்ந்த மண். அதனால், இங்கே தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அதற்கு தலைவரும் ஒத்துக்கொண்டார். இத்தனை நாள் இதை நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்’’ என்றார்.
24
நீளும் தொகுதி லிஸ்ட்
அதனால் தர்மபுரியில் இருக்கிற ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவாரார் என சொல்லப்பட்டது. அடுத்து மீனவர்கள் அதிகமாக வசிக்கும் கடலோர மாவட்டங்களில் விஜய் போட்டியிட போகிறார் என தகவல்கள் அடுத்து வந்து வர ஆரம்பித்தது. குறிப்பாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் விஜய் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்பட்டது. அடுத்த கோவையில் விஜய் கூட்டத்துக்கு போயிருந்தபோது அவருக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைப்பார்த்து விட்டு பேசாமல் கோவையில் போட்டியிடலாமே... கோவையில் தான் போட்டியிட போகிறார் என சில தகவல்கள் வெள்யானது.
அடுத்து மதுரை மேற்கு தொகுதி எம்.ஜி.ஆர் போட்டியிட்ட தொகுதி என்கிற வகையில் மதுரை மேற்கு தொகுதியில் விஜய் போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்கப்போவதாகவும் கூறப்பட்டது. ஏனென்றால் திருச்சியில் தான் முதல் கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார். அந்த வகையில் திருச்சி கிழக்கில் விஜய் போட்டிடப் போகிறார் என்றார்கள். இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்தவர், வெள்ளாளர் சமூக மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடப் போகிறார் என்றார்கள்.
34
விஜயின் ‘வி’ செண்டிமெண்ட்
விஜய், வெற்றி கழகம், விக்கிரவாண்டி மாநாடு என வி செண்டிமெண்டில் விஜய் இருப்பதால், அவர் விருகம்பாக்கம், வில்லிவாக்கம், விருத்தாச்சலம், விக்கிரவாண்டி என வி சென்டிமென்டிலயே நிறைய தொகுதிகள் இருக்கிறது. விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்தினார். விஜயின் இந்த ‘வி’ சென்டிமென்ட்க்கு அவரது ஆஸ்தான ஜோதிடர் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ‘வி’ என்று தொடங்கும் லெட்டரில் ஆரம்பிக்கிற தொகுதியில் நின்றால் வெற்றிவாகை சூடலாம் என்று அவருடைய ஜோதிடர் சொன்னதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த வகையில் இப்போது வி என்று தொடங்கும் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறப்போவதாகச் சொல்கிறார்கள்.
தவெக தலைவர் விஜய் வேளச்சேரியில் போட்டி போட முடிவு எடுத்து, அதற்கான வேலைகளை பார்க்க சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறது. வட மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் முடிவில இருந்த விஜய் தமிழ்நாட்டில் இருக்கிற சில தொகுதிகளின் புள்ளி விவரங்களை பார்த்துவிட்டு வேளச்சேரியை டிக் அடித்து இருக்கிறார். காரணம், வேளச்சேரி யங் அர்ஃபன் கான்சிடியூன்சி என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த சட்டமன்ற தொகுதியில்தான் அதிகமான முதல் தலைமுறை வாக்காளர்கள், ஐடி ஊழியர்கள், தமிழர்கள் அல்லாத நகரவாசிகள் அதிகம் இருக்காங்கள். சென்னைக்குள்ளேயே தொகுதி இருப்பதால் பிரச்சாரத்துக்கும் வசதியாக இருக்கும் என யோசிக்கிறாராம் விஜய். அதனால் விஜய், வேளச்சேரியை தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்த தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2021ல் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட வேளச்சேரியில் திமுகவே போட்டியிட முடிவு செய்து உள்ள்ளது. பாஜக சார்பில் இளைஞரணி தலைவர் எஸ்.ஜே.சூர்யா வேளச்சேரி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.