‘‘மீடியாக்களே.. தமிழ்நாட்டின் சகோதரத்துத்தின் மீதும், சமத்துவத்தின் மீதும், சமூக நல்லிகணத்தின் மீதும் காவிக் கலவர கும்பல் கல்லெறிந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்த மீடியா மேனியா விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டுச் சொல்லுங்கள்’’ என கேள்வி எழுப்பியுள்ள ராஜ்வ் காந்திக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
திமுக மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘ஊடக நண்பர்களுக்கு..! விஜய் தூங்கச் சென்றுவிட்டார். விஜய் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். விஜய் வீட்டில் அலாரம் அடிக்கிறது. விஜய் எழுந்துவிட்டார். விஜய் பல்லு விளக்குகிறார். விஜய் கழிவறையில் இருக்கிறார். விஜய் குளிக்கிறார். விஜய் வீட்டின் கதவு திறகப்படுகிறது. விஜய் கருப்புக் காரில் வெளியே வருகிறார் எனத் தங்கள் வியாபார வெறிக்கு செய்தி வெளியிட்ட ஊடக நண்பர்களுக்கு... தமிழ்நாட்டின் சகோதரத்துத்தின் மீதும், சமத்துவத்தின் மீதும், சமூக நல்லிகணத்தின் மீதும் காவிக் கலவர கும்பல் கல்லெறிந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்த மீடியா மேனியா விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டுச் சொல்லுங்கள்’’ எனத் தெரிவித்து உள்ளார்.