திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தினர், பட்டியல் சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கும் 40 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகிக்கிறது.
சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 முதல்நிலை மாநகராட்சிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், சிறுபான்மையினர், அருந்ததியர், பட்டியலின சமூகத்தவர்கள் அதிகமாக வசிக்கும் 15 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிப்பதாக சர்வே முடிவுகள் கூறுகின்றன. தெற்கே தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனுார், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தவெகவுக்கு கணிசமான அளவில் வாக்குகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.