விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?

Published : Dec 18, 2025, 11:00 AM IST

விஜய்க்கு பிரச்சாரம் மேற்கொள்ள எளிதில் அனுமதி வழங்கப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கரூர் கூட்டத்திற்கும், ஈரோடு கூட்டத்திற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

PREV
14

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் மேற்கொண்டிருந்த பிரச்சார பயணம் சோகத்தில் முடிந்தது.

அன்றைய தினம் விஜய் நாமக்கல், கரூர் என இரண்டு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். நாமக்கல்லில் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கான சூழல்கள் வெளிப்படையாகவே தெரிந்தன. நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் 8.50க்குதான் திருச்சிக்கே வந்து சேர்ந்திருந்தார்.

24

அங்கிருந்துதான் அனுமதி பெறாத சாலை பயணம் தொடங்கியது. நெரிசலில் பெண்கள், குழந்தைகள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், விஜய்யிடம் தங்களின் முகங்களை பதிய வைக்க விமான நிலையத்திலிருந்து விஜய்யை பின்தொடர்ந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த யாரும் இல்லாததால் தாகம், பசி காரணமாக தொண்டர்கள் சோர்வடைய தொடங்கினர். ஓரிரு இடங்களில் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அங்கும் நெரிசல் அதிகமாக இருந்ததால், பெண்களும், குழந்தைகளும் தண்ணீர் வாங்காமல் ஒதுங்கியே நின்றனர். இதனால் சிலர் மயக்கமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த அவர்கள், விஜய் போய்விட்டாரா என்று கேட்டு, குளுக்கோஸ் ஊசியை கழற்சி வீசி எறிந்துவிட்டு கூட்டத்தை நோக்கி ஓடினார்கள் என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியிருந்தார்.

இது வெறும் டிரெய்லர்தான்.

34

கரூரில் மதியம் 3 மணிக்கு விஜய் பேசுவார் என்பதுதான் பிளான். ஆனால் விஜய் இரவு 7.50க்குதான் கரூருக்கு வந்திருந்தார். விஜய்யை பார்க்க காலை 11 மணி முதல் மக்கள் கூட்டம் முந்தியடித்துக்கொண்டு இருந்தது. அவர்கள் சோறு தண்ணீர் இல்லாமல் விஜய்யை பார்க்க காத்திருந்தார்கள். ஒருவேளை விஜய் மதியம் 3 மணிக்கு வந்திருந்தால் கூட, அவரை பார்த்துவிட்டு 4 மணிக்கு கூட்டம் கொஞ்சமாக கலைந்திருக்கலாம். ஆனால், விஜய் இப்போ வருவார், இதோ வந்துவிட்டார் என்று நிர்வாகிகள் கூட்டத்தை கலையாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். நீண்ட நேரம் நின்றுக்கொண்டு இருந்ததால் ஏற்பட்ட சோர்வு, பசி, தாகம் இதெல்லாம் சேர்ந்து நெரிசல் பலிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு பிரச்சாரம் மேற்கொள்ள எளிதில் அனுமதி வழங்கப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று ஈரோட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.

44

இந்நிலையில் கரூர் கூட்டத்திற்கும், ஈரோடு கூட்டத்திற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கரூர்                                                                                                  ஈரோடு

1. ரோட் ஷோ                                             மிகப்பெரிய மைதானத்தில் மக்கள் சந்திப்பு

2.குடிநீர், உணவு என எந்த வசதியும் இல்லை.    முறையான குடிநீர் வசதிகள் (1L+ குடிநீர் பாட்டில்கள்) ஏற்பாடு

3.மக்கள் நிற்பதற்காக சிறப்பு வசதி எதுவும் இல்லை.            தடுப்புகள் அமைத்து மக்களுக்கு தனி ஏற்பாடு

4.விஜய் வாகனம் புகுந்த பின்னர்தான் கூட்ட நெரிசல்.     விஜய் வாகனம் நிற்பதற்கு தனியாக ஏற்பாடு

5. நெரிசல் ஏற்பட்ட போது மக்கள் தப்பி செல்ல முடியவில்லை.  நாலாபுறமும் திறந்த வெளியாகவே காணப்படுகிறது

6.நெரிசலில் 9 குழந்தைகள், சில பெண்கள் சிக்கி உயிரிழப்பு.        கர்ப்பிணிகள், குழந்தைகளை அனுமதிக்கவில்லை

7.பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை.     பெண்கள் அமர தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

8.நீண்ட தூரத்திற்கு பிரச்சார வாகனத்திலேயே பேரணியாக சென்றார்.    விஜய் கூட்டம் தொடங்கும் முன்பே மைதானத்திற்குள் வந்த பிரச்சார பேருந்து

9.போதுமான அளவு போலீசார் இல்லை என குற்றச்சாட்டு.    அதிக போலீசார் குவிக்கப்பட்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories