‘‘ஒரு மாற்றத்தை தருவோம் என்று சொன்னார் விஜய். ரசிகர் மன்றத்தில் உழைப்பவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்லி பதவி குடுப்போம் என்று சொன்னார்கள். யாருக்காவது பதவி கொடுத்திருக்கிறார்களா?’’ என திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விஜய்க்கு ரசிகர்களாக இருந்தவர்களுக்கு, விஜய்க்கு வெல்விஷ்சராக இருந்தவர்களுக்கு, விஜய்க்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு, விஜய்க்கு பாலாபிஷேகம் செய்தவர்களுக்கு, விஜய்க்காக உழைத்தவர்களுக்குத்தான் இங்கு பதவி வழங்கப்படும் என்று சொன்னார் புஸ்ஸி ஆனந்த். விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் யாராவது ஒருத்தர் தவெகவில் பதவியில் இருக்கிறார்களா? பாருங்க ஒரு பணக்காரன் திடீர்னு ஒரு பணக்காரன் ஆதவ் அர்ஜூனா வந்து விட்டார். அவர் நல்லவர் என்றால் பரவாயில்லை, ஒழுக்கமானவர் என்றால் பரவாயில்லை.