இதனையடுத்து நேற்று மாலையும் அமைச்சர்கள் குழு தூய்மை தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து நேற்று இரவு ஆயிரக்கணக்கான போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர், இந்த நம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்! குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.