புடினுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமானால், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் மீது 100% வரை இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தெளிவாகக் கூறியுள்ளார். இந்த ஒட்டுமொத்த முயற்சியின் நோக்கமும் எண்ணெய் வணிகத்தில் இருந்து ரஷ்யாவின் வருவாயை பலவீனப்படுத்துவது. இந்தியாவும், சீனாவும் ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கும் வரை, உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பொருளாதார அடி கொடுப்பது கடினம் என்று டிரம்ப் நம்புகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் தூதர் டேவிட் ஓ'சல்லிவன், பிற மூத்த அதிகாரிகளுடனான ஒரு மாநாட்டு அழைப்பின் போது டிரம்ப் இதனை வெளிப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா, சீனா மீதான வரிகளை அதிகரித்தால், அமெரிக்காவும் இந்த உத்தியில் அதனுடன் நிற்கும் என்றும் டிரம்ப் நிர்வாகம் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் ஒருவர் கூறுகையில், ‘‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால், நாங்களும் அமெரிக்காவை அதை ஆதரிப்போம்’’ என்று எனத் தெரிவித்துள்ளார்.