இன்றைய படுதோல்வி நாளைய தொடர் தோல்வியாகிவிடும்! இப்பனாச்சு திருந்துங்க! இபிஎஸ்.ஐ எச்சரிக்கும் மருது அழகுராஜ்.!

Published : Mar 04, 2023, 06:58 AM ISTUpdated : Mar 04, 2023, 06:59 AM IST

அடித்து வைத்துள்ள பணத்தை கொண்டு பொதுக்குழு ஆடுகளை கொள்முதல் செய்ய முடியுமே தவிர பொதுமக்களை வாங்க முடியாது என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டு தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். 

PREV
15
இன்றைய படுதோல்வி நாளைய தொடர் தோல்வியாகிவிடும்! இப்பனாச்சு திருந்துங்க! இபிஎஸ்.ஐ எச்சரிக்கும் மருது அழகுராஜ்.!

நடந்து முடிந்த ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 66 575 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக தோல்வி என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தின் தோல்வியை ஒருபோதும்  மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். 

25

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் மக்கள் செல்வாக்கோ நட்சத்திர அந்தஸ்த்தோ  பிறரை வசீகரிக்கும் அறிவு ஆற்றலோ குறைந்த பட்சம் அனைவரையும் அரவணைத்து செல்லும் தாயுமாணவ தலைமைப் பண்போ கடுகளவும் இல்லாத எடப்பாடி என்கிற தனிமனிதனின் அதிகார வெறியும் அபகரிப்பு முயற்சியும் தான் முக்கடல் சூழ்ந்த பாரததத்தின் மூன்றாம் பெரும் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இப்படி ஒரு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதே சத்தியமான உண்மை.

35

ஒன்று பட்டால் தான் வென்று காட்ட முடியும் என்பதை ஆயிரம் முறை அண்ணன் ஓபிஎஸ் வலியுறுத்தியபோதும் அதனை செவி கொடுத்து கேட்காமல் இயக்கத்தின் நலத்தை விட தன்நலமே முக்கியம் என எடப்பாடி காட்டிய மூர்க்கத்தனம் தான் இப்படிப்பட்ட  நிலைக்கு காரணம். இதனை தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். 

45

 இதனை தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் எடப்பாடியின் ஆட்சியை வைத்து அறுவடை செய்தவர்களும் பெருத்த மகசூல் பார்த்த முன்னாள் மாண்புமிகுக்களும். கடிவாளம் இல்லாத குறுநில மன்னர்களாக திரியும்  மாவட்டச் செயலாளர்களுமே இந்த பரிதாப சூழலலுக்கு பங்காளிகள் என்பதை உணர வேண்டும்.
 

55

அடித்து வைத்துள்ள பணத்தை கொண்டு பொதுக்குழு ஆடுகளை கொள்முதல் செய்ய முடியுமே தவிர பொதுமக்களை வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டு தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் இன்றைய படு தோல்வி நாளைய தொடர் தோல்விகளாகிவிடும் என்பது நிச்சயம். எனவே யாருக்கு வெற்றி தோல்வி என்பதை புறந்தள்ளி விட்டு எதிர்கால வெற்றிக்கு ஒரே வாய்ப்பு ஒற்றுமை மட்டுமே உணர்ந்து திருந்துவது அவசியம் அவசரம். அம்புட்டு தான் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories