திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பியின் பதவி பறிப்புக்கு இதுதான் காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

First Published May 27, 2023, 7:27 AM IST

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும்  திமுக தலைமைக்கு புகார் சென்றதை அடுத்து காஜா நஜீரின் பதவி பறிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ks masthan

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஐந்து முறை செஞ்சி பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அவரது மகன் மொக்தியார் செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் உள்ளார். 

சமீபத்தில் சாராய வழக்கில் திமுக கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமைச்சர் மஸ்தான் மரூர் ராஜாவுக்கு கேட் ஊட்டும் போட்டோ வைரலானது. இந்தபுகைப்படத்தை சுட்டிக்காட்டி பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மஸ்தானின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று கூறிவந்தனர். 

இந்நிலையில் அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும்  திமுக தலைமைக்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து, செஞ்சி பேரூர் கழக செயலாளராக பதவி வகித்து வந்த காஜா நஜீரின் பதவி பறிக்கப்பட்டது. 

ks mastan

இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- விழுப்புரம் வடக்கு மாவட்டட் செஞ்சி கிழக்கு ஒன்றியம் செஞ்சி பேரூர் கழக செயலாளர் காஜா நஜீர் அவர்களை பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து கழகப் பணிகள் செவ்வனே நடைபெற அவருக்கு பதிலாக எம்.கார்த்திக் அவர்கள் செஞ்சி பேரூர் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். 

click me!