அம்பேத்கர் சொன்னதை போன்று ஒடுக்கப்பட்ட பட்டியல் இன சமூகத்திற்கு அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கப்பட்டபோது அதை முதலில் ஒரு பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவருக்குத்தான் கொடுத்தோம். தலித் எழில் மலைக்கும், பொன்னுசாமிக்கும் மத்திய அமைச்சர் பதவியை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. ஒடுக்கப்பட்ட குறிப்பாக பட்டியலின மக்களுடைய உரிமைகள் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை பெற்றெடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்ட போது அண்ணல் அம்பேத்கருடைய கொள்கைகளை நாம் வலியுறுத்த வேண்டும், நாம் வெற்றி பெற வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பட்டியலின சமூகத்திற்காக அரசியல் செய்கிறோம் என்று சொல்லக்கூடியவர்கள் அண்ணல் அம்பேத்கருடைய கொள்கைகளை வலியுறுத்த கூடியவர்களாக, செயல்படுத்த கூடியவர்களாக, நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக இல்லை. குறிப்பாக திருமாவளவன் நான் சமூக நீதி காக்கக்கூடியவன் என்று சொல்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்ற பொழுது திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய திருமாவளவன் வாய்மூடி மௌனியாக இருந்து கொண்டிருக்கிறார்.